விமல் ஆஷ்னா ஜவேரி நடிக்க சர்மிளா மாண்ட் ரே தயாரிக்க AR.முகேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம் இம்மாதம் 7 ம் தேதி வெளியாகிறது. இதற்கு முன்பு விமல் நடித்த எந்த படமும் இவ்வளவு தியேட்டர்களில் வெளியானதில்லை. கேரளாவில் மிகப் பெரிய நடிகர்களின் படங்கள் கூட 100 தியேட்டர்களுக்குள் தான் வெளியாகும்..ஆனால் இந்த படம் கேரளாவில் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படி இந்த படத்துக்கு ஏற்பட்ட டிமாண்ட் குறித்து இயக்குநர் முகேஷ் “இது கிளாமர் கலந்த ஹூயூமர் படம் என்றும்பத்திலேயே கூறி இருக்கிறோம். அதாவது அடல்ஸ் ஒன்லி படம்தான் என்றாலும் ஆபாசப் படமில்லை. கொஞ்சம் விளக்கமாக சொல்வதானால் இந்த சினிமா என்பதே ஏழு வகையான கதையமைப்பு கொண்டவை தான். இதற்குள் தான் எல்லா படங்களுமே அடங்கும். அதில் ஒரு வகை கிளாமர் ஹுயூமர். அதைத் தான் இதில் கையாண்டிருக்கிறோம். கிளாமரிலும் எல்லை மீறாத அளவையே தொட்டிருக்கிறோம். இன்று தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பவர் களின் எண்ணிக்கை குறைவு. இளைய தலைமுறையை சேர்ந்தவர்கள் தான் தியேட்டர்களுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு எது பிடிக்குமோ அதை தான் கதையாக சொல்கிறோம். இந்த படத்தின் டீசரை யூ டியூப்பில் 20 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். அதுவும் ஆறே நாட்களில். இதற்கு முன்பு விமல் படத்தின் டீசருக்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்ததில்லை. இப்ப வரைக்கும் டிரைலருக்கும் கிடைத்த வரவேற்பு (30 லடத்துக்கும் அதிகம்)க்கேற்ற மாதிரி படமும் இருக்கும். படத்தின் படப்பிடிப்பு லண்டனில் 20 நாட்கள் நடை பெற்றது. தென்காசியிலும் சென்னையிலும் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம். முகம் சுளிக்கிற மாதிரி ஆபாசம் இல்லாமல் ரசிக்கிற மாதிரி கிளாமர் ஹுயூமர் படம். அதையெல்லாம் புரிந்து கொண்டதால்தான் ஏகப்பட்ட தியேட்டர்கள் விரும்பி எங்கள் படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
இப்பேர்ப்பட்ட விமல் படம் நடித்த முதன் முறையாக உலகம் முழுவதும் 500 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இந்த விஷயம் திரையுலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன்
இசை – நடராஜன் சங்கரன்
பாடல்கள் – விவேகா
கலை – வைரபாலன்
நடனம் – கந்தாஸ்
ஸ்டண்ட் – ரமேஷ்.
எடிட்டிங் – தினேஷ்
மக்கள் தொடர்பு: மெளனம் ரவி
தயாரிப்பு மேற்பார்வை – சுப்ரமணி
தயாரிப்பு நிர்வாகம் – பி.ஆர்.ஜெயராமன்
தயாரிப்பு – சர்மிளா மாண்ரே, ஆர்.சர்வண்
திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் AR.முகே