அழிந்து வரும் கிராமத்து வாழ்வியலை சொல்லவரும் “ உளிரி “

0
222

ஸ்ரீலட்சுமி பிரியா பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் எம்.ஸ்ரீனிவாசன்,   சுந்தரி, எஸ்.யோகேஷ்  ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘உளிரி.’ இந்தப் படத்தில் சுரேஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக சயனி நடித்துள்ளார். மற்றும்  பசங்க சிவகுமார், கலாராணி, யோகி, சர்மிளா, சுமதி ஆகியோரும் நடித்துள்ளனர்.     

ஒளிப்பதிவு – வெங்கட், படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், கலை இயக்கம் – சாமி கலைக்குமார், சண்டை இயக்கம் – மெட்ரோ மகேஷ், நடன இயக்கம் – மது மாலிக், தயாரிப்பு மேற்பார்வை – A நாகராஜ், தயாரிப்பு  – எம்.ஸ்ரீனிவாசன்,  சுந்தரி,  எஸ்.யோகேஷ், இசை, பாடல்கள், எழுத்து, இயக்கம், – R.ஜெயகாந்தன்.

படம் பற்றி இயக்குநர் ஆர்.ஜெயகாந்தன் பேசும்போது, “சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்புவரை காவிரி ஆற்று படுகை மனிதர்களின் பஞ்சம் தீர்க்க உணவாக, அவர்களது பண்பாட்டின் கூறாக இருந்த ‘உளிரி’ எனும் மீன்  இனமே இன்று அழிக்கப்பட்டுவிட்டது.

அதுமட்டுமல்லாமல், நமது வாழ்வியல் பண்பாட்டின், பல கூறுகள் அழிக்கப் பட்டு இன்று காவிரியாற்று கிராமங்கள் தனது அடையாளங்களை இழந்து பொலிவற்று,  இயல்பை தொலைத்து பொய்யான முகப் பூச்சோடு உண்மை பொலிவை இழந்து காணப்படுகிறது.

நமது பண்பாட்டின் கூறாய் இருந்த காதலும் இன்று அழிக்கப்பட்டிருக்கிறது. இப்படி தன் வாழ்விடத்தைச் சார்ந்து நடந்த நிகழ்வுகளைத் தொகுத்து ஒரு வாழ்வியல் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறேன் இந்த ‘உளிரி’யை.

படப்பிடிப்பு கும்பகோணம்,  ஜெயங்கொண்டம் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது…” என்றார் இயக்குநர் R.ஜெயகாந்தன்.