நடிகர் நரேன் மூன்று மொழிகளில் தயாரிக்கும் ‘கண் இமைக்கும் நேரத்தில்

கன்னடத்தில் ‘வாசு’ என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய அஜித் வாசன், தற்போது `கண் இமைக்கும் நேரத்தில்’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை  இயக்குநர் அஜித் வாசனுடன் நடிகர் நரேனும் இணைந்து தயாரிக்கிறார். ‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகர் நரேன், இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 4 மணிவரை நடக்கும் ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஆக்சன் த்ரில்லராக இப்படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் அஜித் வாசன்.

புதுமுகங்கள் பலரும் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை  நடிகர் கார்த்தி, மற்றும் நரேன்  இருவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர். 

விரைவில் படத்தின் டீசர் வெளியிடப்படவுள்ளது.