இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள ஜீனியஸ் திரைப்படம் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து அவர் இயக்கியுள்ள சாம்பியன் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. விளையாட்டை மையமாக வைத்து வந்த “ வெண்ணிலா கபடி குழு “,“ஜீவா“ போன்ற வெற்றி படங்களை இவர் இயக்கியுள்ளார். தற்போது உருவாகி வரும் சாம்பியன் புட்பாலை மையமாக கொண்டது.
இதில் புதுமுகம் ரோஷன் , மிர்னாலினி நாயகன் நாயகியாக நடித்துள்ளார்கள். இவர்களோடு GK ரெட்டி , அஞ்சாதே நரேன் , ஜெயப்ரகாஷ் , RK சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்துக்கு இசை அரோல் குரொலி , ஒளிப்பதிவு சுஜித் சாரங் , களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் சார்பாக K. ராகவி இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் டிசம்பர் 2018 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சுசீந்திரன் இயக்கியுள்ள ஏஞ்சலினா திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.