சந்தானம் நடிக்கும் புதுப் படத்துக்கு பூஜை போட்டாச்சு!

நடிகர் சந்தானம், அறிமுக இயக்குநர் ஜான்சன் என்பவர் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் (Circle Box Entertainment) என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ராஜ் நாராயணன் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக தாரா அலிசா பெர்ரி (Tara Alisha Berry)  என்னும் பாலிவுட் நடிகை நடிக்கிறார். இவர் ஹிந்தி யில் வெளியான ‘மாஸ்ட்ரம்’ (Mastram), ‘த பர்ஃபெக்ட் கேர்ள்’(The Perfect Girl), ‘லவ் கேம்ஸ்’( Love Games) என ஐந்திற்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர். 

மேலும், படத்தில் மிக முக்கியமான ஒரு கேரக்டரில் ‘பாஜிராவ் மஸ்தானி’ என்ற இந்தி படத்தில் நடித்த நடிகர் யதீன் கார்கேயர்(Yatin Karyekar) நடிக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன் நடிக்கிறார். சிறிய இடைவெளிக்கு பின் தெலுங்கு நடிகர் சாய்குமார்  ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்

இந்தப் படத்திற்கு கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கபாலி’, ‘காலா’, மற்றும் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண் டு இருக்கும் ‘வடசென்னை’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த ஹிட் டடிக்கும் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லியோ ஜான் பால்  படத் தொகுப்பாளராக பணியாற்ற, ராஜா கலை இயக்கத்தை கவனிக்கிறார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜான்சன். இவர் ‘நாளைய இயக்குநர் சீஸன்-4’-ல் வெற்றி பெற்றவர் என்பதும், இந்த படத்தின் மூலம் தமிழ்ச் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தற்போது ‘புரொடக்சன் நம்பர்-1’ என்ற பெயரில் இந்த படத்திற்கான பணிகள் தொடங்கி இருக்கிறது. விரைவில் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்தப் படத்தின் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.