பேட்ட – ஷூட்டிங் 15 நாட்களுக்கு முன்னதாகவே முடிஞ்சது! ரஜினி மகிழ்ச்சி!

விரைவில் அரசியலில் பிசியாகப் போகும்  ரஜினிகாந்த், தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார்.  கடந்த ஜூன் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், டேராடூன், சென்னை, லக்னோ உளிட்ட பல நகரங்களில் நடைபெற்று வந்தது.

மேலும், மதுரையை பின்னணியாக கொண்ட போர்ஷனும் பேட்ட படத்தில் இடம்பெறுகிறது. இதற்காக ரஜினிகாந்த் முறுக்கு மீசை வைத்த கெட்டப் ஒன்றிலும் நடிக்கிறார். இந்த கெட்டப்பும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க, திரிஷா முதல் முறையாக ரஜினிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும், பாபி சிம்ஹா, சிம்ரன், சசிகுமார் என்று படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறார்கள்.

இந்த நிலையில், ‘பேட்ட’ படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதிலும், படப்பிடிப்பு திட்டமிட்ட நாட்களில் 15 நாட்களுக்கு முன்னதாகவே முடிந்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கும் அவர், இதற்காக தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

தனது ரசிகர்களுக்கு விஜயதசமி வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த், அதனுடன் இந்த தகவலையும் வெளியிட்டுள்ளார்.