சென்னை அண்ணா நகரில் பிவிஆர் குழுமத்தின் மிக பிரமாண்டமான திரையரங்கம்

சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பழைய தியேட்டர்கள் போதிய வருமானம் இல்லாமல் மூடப்பட்டுக் கொண்டு வந்தாலும், மற்றொரு பக்கம் மெஹா சைஸ்க்ளைல் உருவாகும் புதுப் புது ‘மால்’ தியேட்டர்கள் உருவாகிக் கொண்டேதான் இருக்கின்றன. அந்த வரிசையில்தான் பிவிஆர் நிறுவனம் சென்னை, அண்ணாநகரில் உள்ள விஆர் மாலில் புதிதாக 10 தியேட்டர்களைத் திறந்து உள்ளது. ஏற்கெனவே பிவிஆர் சினிமாஸ், சென்னையில் அமைந்தகரை, வேளச்சேரி, பல்லாவரம், ரெட்ஹில்ஸ் ஆகிய இடங்களில் தியேட்டர்களை நடத்திக் கொண்டு இருக்கிறது.

சமீபத்தில் சென்னை சத்யம் சினிமாஸ் நிறுவனத்தையும் பிவிஆர் நிறுவனம் 850 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. இந்தியாவில் பல ஊர்களில் தியேட்டர்களை நடத்தி வரும் பிவிஆர் சினிமாஸ் இந்தத் துறையில் தனி முத்திரை பதித்து வருகிறது. இந்நிலையில் சென்னை அண்ணா நகரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள வீ.ஆர் சாப்பிங் மாலில் 10 திரைகள், 2594 இருக்கைகள் வசதி கொண்ட திரையரங்கம் ஒன்றை திறந்தது. இந்த திரையரங்கத்தின் புகைப்படங்கள் மற்றும் விடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி, காண்போரை ஆச்சரியப்படுத்தி வருகிறது. பிவிஆர் குழுமத்தின் மிகப்பெரிய மல்டிஃபிளக்ஸ் திரையரங்கமான இது, சென்னைக்கு ஒரு மிகப்பெரிய மணிமகுடம்.

இத்திரையரங்க டிக்கெட் விலைகளும் மற்ற திரையரங்குகளை போல 165 ரூபாய் தான். இதன் சிறப்பாக கருதப்படும் பிவிஆர் எக்ஸ்.எல் (PVR(xl))எனப்படும் ஒரு திரைக்கு மட்டும் விலை 205 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐமேக்ஸ் திரைகள் திறக்கப்பட உள்ளதாக எந்த தகவலும் இதுவரை இல்லை.

இத்திரையரங்கு திறக்கப்பட்டதுடன் சேர்த்து மொத்தம் 60 நகரங்களில், 725 திரைகளுடன், 155 அரங்குகள் கொண்டு இயங்கும் மிகப்பெரிய குழுமமாக பிவிஆர் திகழும் என தெரிகிறது.

இங்குள்ள தியேட்டர்வாரியாக உள்ள இருக்கைகளின் எண்ணிக்கை…

1) Audi No-01(pxl)- 444
2) Audi No-02- 177
3) Audi No-03- 366
4) Audi No-04- 388
5) Audi No-05- 450
6) Audi No-06- 190
7) Audi No-07- 126
8) Audi No-08- 115
9) Audi No-09- 136
10)Audi No-10- 202