சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் த்ரிஷா நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த், தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சிம்ரன், பாபி சிம்ஹா, நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், முனீஸ்காந்த், ராமச்சந்திரன் ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் த்ரிஷா நடிப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளியான நிலையில் அதை சன் பிக்சர்ஸ் உறுதிப்படுத்தி உள்ளது. . கமல் ஹாசன் உள்ளிட்ட தமிழின் பெரும்பாலான முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்ட த்ரிஷாவுக்கு, ரஜினியுடன் நடிக்காதது பெரிய குறையாகவே இருந்தது. இதை த்ரிஷாவே பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.
எனவே, இந்தப் படத்திலாவது அந்தக் குறை தீருமா என்று ஆவலோடு காத்திருந் தனர் த்ரிஷா ரசிகர்கள். இந்நிலையில், த்ரிஷா ரஜினியுடன் நடிப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.