60 வயது மாநிறம் படத்திற்கு தமிழகத்தில் மட்டும் 300 அரங்குகள்!

படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்ப்பார்ப்புக்கும் உரிய படமாக மாறியிருக்கிறது கலைப்புலி தாணுவின் அடுத்த வெளியீடான 60 வயது மாநிறம்.இந்தப் படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ், அல்சைமர் எனும் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டவராக நடிக்கிறார். அவரைத் தேடுகிற மகனான விக்ரம் பிரபு நடிக்கிறார். வில்லன் வேடங்களில் நடித்து வந்த பிரகாஷ்ராஜ் தற்போது குணசித்ர பாத்திரங்களில் நடிப்பதற்கு முக்கியத்துவம் தருகிறார்.

படத்தைப் பற்றி இயக்குனர் ராதாமோகன் கூறும்போது,’மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படம். பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி நடிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசை அமைக் கிறார். சமீபத்தில் தணிக்கை குழுவுக்கு படம் திரையிடப்பட்டது. படம் பார்த்த அதிகாரிகள் பாராட்டுதெரிவித்ததுடன் யூ சான்றிதழ் வழங்கினர்” என்றார்.

ராதாமோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி, விக்ரம் பிரபு நடித்துள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்து உள்ளார்.தனது பெருமைக்குரிய தயாரிப்பாக கலைப்புலி தாணுவே அறிவித்துள்ள இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

தமிழகத்தில் மட்டும் இந்தப் படத்துக்கு 300 அரங்குகள் கிடைத்துள்ளன. வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் என 500-க்கும் மேற்பட்ட அரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது 60 வயது மாநிறம்.

இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறுகையில், “உண்மையிலேயே எனது பெருமைக்குரிய தயாரிப்புகளில் இந்தப் படமும் ஒன்று. எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தரும். மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. அதற்கேற்ப நல்ல திரையரங்குகள்
கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.