முழுக்க ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்குள் எடுக்கப்பட்ட ஒரு பேய்ப்படம் பேய்ப்பசி

0
249

புதுமுகங்கள் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் ரைஸ் ஈஸ்ட் நிறுவனம் சார்பில் ஶ்ரீநிதி சாகர் தயாரித்திருக்கும் திரைப்படம் பேய்ப்பசி. இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா இன்று நடை பெற்றது. கருணாகரன்,பக்ஸ், டேனியல் ஆகியோருடன் புது முகங்கள் நடிக்க வித்தியாசமான கதையில் இப்படம் உருவாகியுள்ளது.

ஒரு டிபார்ட்மெண்ட்டுக்குள் ஒரு இரவில் முழுக்கதையும் நடைபெறுகிறது. நான் தயாரிப்பாள ருக்கு கதையே சொல்ல வில்லை. ஒரு ஒன்லைன் மட்டுமே சொல்லி இந்தப்படத்தை செய்தேன். இப்படம் இதுவரை வராத பேய்ப்படமாக இது இருக்கும் என்றார் இயக்குநர் ஶ்ரீநிவாஸ் கவிநயம்.

தொடர்ந்து பேசிய வெங்கட் பிரபு இப்படித்தான் பல படங்களில் அப்படித்தான் நடக்கும் கதையை சொன்னால் படம் செய்ய மாட்டார்கள். சிலபடங்களுக்கு ஒன்லைன் மட்டும் தான் சொல்ல முடியும். என் படங்களில் கதையே கிடையாது. இப்படம் நல்ல கதையம்சத்துடன் வந்திருக்கிறது. ஜெயிக்க வாழ்த்துக்கள் என்றார்.

விழாவில் பேசிய ஆர்யா இப்போதைய சினிமாவில் பெரிய படம் சிறிய படம் என்று எதுவும் கிடையாது புதுமையான ஐடியா புதுமையான விஷயம் இருந்தால் பெரிய வரவேற்பு இருக்கும். இந்தப்ப்டத்தின் ஹிரோ ஹரி என் ஜிம்மேட் நிறைய பேசமாட்டார். இனி பேசித்தான் ஆகணும். யுவனின் இசையில் அறிமுகமாவது மிகப்பெரிய வரம் அது எனக்கு கிடைத்தது. இப்போது ஹரிக்கு கிடைத்திருக்கிறது. கண்டிப்பாக ஜெயிப்பார் என்றார்.

விழாவின் இறுதியில் பேசிய யுவன் சங்கர் ராஜா ஹரி எங்கள் குடும்பத்து பையன். சின்ன வயசிலிருந்தே அவருக்கு நடிக்க ஆசை. இடையில் எங்கள் கூட சண்டை போட்டு விட்டு ஆஸ்திரேலியா போய்விட்டார். அப்பாவின் இசை விழாவுக்கு ஆஸ்திரேலியா போனபோது அவரை திரும்ப சென்னை வர வைத்தேன். அவரை வைத்து நான் தயாரிப்பதற்காக பேசினோம் திரும்பவும் சண்டை போட்டுக்கொண்டு ஶ்ரீலங்கா போவிட்டார். மீண்டும் வந்து ஆரம்பித்த படம் தான் இது. பலர் என்னிடம் சின்ன படங்களுக்கு எப்படி இசையமைக்கிறீர்கள் எனக் கேட்கிறார்கள்.

ஒரு படம் சம்பளம் கம்மியாக இருந்தாலும் நான் அந்தப்படத்தை ஒத்துக்கொள்ளக்காரணம் அந்தப்படம் என்னைக் கவர்ந்ததுதான். ஒரு படம் பிடித்திருந்தால் நான் ஒத்துக்கொள்வேன். படம் பிடித்திருந்தால் பணம் பிரச்சனையில்லை. இதை எல்லாத்துறையிலும் அனைவரும் செய்தால் துறை செழிக்கும். இந்தப்படம் பிடித்து இசையமைத்திருக்கிறேன் கண்டிப்பாக ஜெயிக்கும் என்றார். மேலும் பல பிரபலங்கள் படத்தை பாரட்டினார். ஜனரஞ்சகமாக உருவாகியுள்ள இப்படம் வெகு விரைவில் படம் திரைக்கு வரவிருக்கிறது.

கதிரவன்