வசந்தபாலன் – ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்!

0
258

அங்காடித்தெரு, வெயில், அரவான், காவியத்தலைவன் படங்களை இயக்கிய வசந்தபாலன், அடுத்து ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு சென்னை ஓல்டு மகாபலிபுரம் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு அரங்கமைப்பில் பூஜையுடன் இனிதே தொடங்கியது. இவ்விழாவில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி, நந்தனராம், பசங்க பாண்டி, தயாரிப்பாளர் ஸ்ரீதரன் மரியதாசன், எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் பி.டி.செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ‘பள்ளிப்பருவத்திலே’ நாயகன் நந்தன் ராம், ‘பசங்க’ நாயகன் பாண்டி, ஆர்யாவுடன் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான அபர்ணதி கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடிக்கிறார். இவர்களுடன் ஜெனிஃபர், மணிமேகலை, பாகுபலி வில்லன் பிரபாகர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இசை -ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவு-கணேஷ் சந்திரா, சண்டை-அன்பறிவ், வசனம்- S.ராமகிருஷ்ணன், பாக்கியம் சங்கர், எடிட்டிங்-ரேமண்ட், பாடல்கள்-கபிலன், கருணாகரன். கதை,திரைக்கதை, இயக்கம்-வசந்தபாலன், எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் பி.டி.செல்வகுமார். தயாரிப்பு- கிரிகேஷ் சினி கிரியேஷன்ஸ் ஸ்ரீதரன் மரியதாசன். இவர் விஷால் நடித்த இரும்பு திரை, மிஷ்கினின் சவரகத்தி படங்களை வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.