காளி – விமர்சனம் = கவர்கிறான்

தத்து கொடுக்கப்பட்டு அமெரிக்காவில் வளர்ந்து பெரிய டாக்டராகி விட்ட இளைஞன் தன் ஒரினிஜின அம்மா & அப்பாவைத் தேடி இந்தியா வரும் ஜீரோ , நம் தமிழ்நாட்டில் சந்திக்கும் தன் நிஜ வாழ்க்கை படக் கரு.

கொஞ்சம் சுருக்கமாக கதையைச் சொல்வதென்றால் அமெரிக்காவில் தனது சொந்த மல்டி ஸ்பெஷாலட்டி ஹாஸ்பிடலில் பெரிய டாக்டராக, சர்ஜனாக இருக்கும் விஜய் ஆண்டனிக்கு அடிக்கடி ஒரி கெட்ட கனவு வருகிறது. அதே நேரம் தன்னை வளர்க்கும் அமெரிக்க பெற்றோர் ., தன் நிஜ பெற்றோர் அல்ல…. எனும் உண்மையையும் தெரிந்து கொள்ளும் விஜய் ஆண்டனி., தன் சிறு பிராய நிகழ்வுகள் தான்…. தன் கெட்ட , கெட்ட கனவுகளுக்கு காரணம் , எனவும் கருதுகிறார். இதை அடுத்து .,விஜய் ஆண்டனி, இந்தியாவுக்கு கிளம்பி தான் யார்? என்பதுடன் தன் சிறு பிராயத்தையும், பெற்றோரையும் தேடி கிளம்புகிறார். வந்த இடத்தில் அவருக்கு அவரது பெற்றோரும் உற்றார், உறவினர்களும் யார்? என்பதைக் கண்டறியும் கதையின் வித்தியாசமான களமும் , விறுவிறுப்பான காட்சிப்படுத்தலும் தான் “காளி ”

தற்போது கோலிவுட்டில் தனி அந்தஸ்து பெற்றுள்ள தயாரிப்பு நிறுவனமான “விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் “பாத்திமா விஜய் ஆண்டனி வழங்க,, விஜய் ஆண்டனி , அஞ்சலி , சுனைனா ,ஷில்பா மஞ்சுநாத் , அம்ரிதா யோகி பாபு , நாசர் , ஆர்.கே .சுரேஷ் , வேல ராமமூர்த்தி , ஜெயப்பி ரகாஷ், சவீதா …உள்ளிட்ட பலரும் நடிக்க சக்தி சரவணன் சண்டை பயிற்சியில் லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பில் , ரிச்சர்ட் எம். நாதனின் ஒளிப்பதிவில் , விஜய் ஆண்டனியின் இசையில் கிருத்திகா உதயநிதி யின் எழுத்து , இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் “காளி .”

டைட்டிலின் போதே “இதாங்க என் பிரச்சினை , ஒரு குழந்தை அதை தீர்த்துக்க ட்ட , ஒரு பாம்பு , கூடவே ஒரு மாடு முட்ட வருவது … இப்படி அடிக்கடி எனக்கு கனவு வருது …” என்றபடி ., என்ட்ரி ஆகும்அமெரிக்க டாக்டர் பரத்தாக பந்தாவாக அறிமுகமாகும் விஜய் ஆண்டனி., காட்டு பையன்காளியாக ,நாசரின்இளவயது திருட்டு மாரியாக , ஊர் பெரிய மனிதர் பெரியசாமி – மதுசூதனன் ராவின்இளவயதுக்காரராக இளம் வயது பாதர் ஜான் எனும் , ஜெ.யப்பிரகாஷாக ஒவ்வொரு கெட்-அப்பிலும் புகுந்து புறப்பட்டு கலந்து கட்டி வழக்கம் போலதன் பாணியில் , கலக்கியிருக்கிறார்.

நாயகிகளாக அஞ்சலி , சுனைனா ,ஷில்பா மஞ்சுநாத் , அம்ரிதா உள்ளிட்ட நான்கைந்து நாயகியரில் அனுபவமிக்க அஞ்சலியும் , அம்ரிதாவும்கூடுதல் நடிப்பில் கவனம் ஈர்க்கின்றனர். அதிலும் , “மனசுகாயப்பட்டிருக்கு மருந்து போட ணும் தூக்கம் கூட வரலை … ” எனும் நாட்டு வைத்தியச்சியாக அஞ்சலி கூடுதல் ப்ளஸ். “ஒரு பொண்ணுக்கு பிடிக்கிற அளவுக்கு உன்கிட்ட என்னடா இருக்கு ..? ஒருத்திக்கு , ஒருத்தரை பிடிச்சிருக்குன்னா அடுத்த முறை அவனை எப்படா பார்ப்போம்னு இருக்கணும் .ஏன்டா பார்த்தோம்னு இருக்கக் கூடாது … ” என “பன்ச் “அடிக்கும் கல்லூரி நாயகியும் ப்ளஸ்!

எண்பதுகளின் நடந்த நிஜ சம்பவங்களான “டேய் வானத்துக்கு கீழே உள்ள அத்தனையும் தூங்கும் ஆனா வட்டி மட்டும் தூங்காதுடா …..” என்று வசனம் பேசியபடி ., ஜாதி வெறி பிடித்த மிருகமாக மிரட்டியிருக்கும் வேல ராமமூர்த்தி , அவரது கையாளாக ஆர்.கே .சுரேஷ் , நாசர் , ஜெயப்பிரகாஷ், சவீதா …உள்ளிட்ட எல் லோரும் தங்கள் யதார்த்தமான ,இயல்பான நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றன ..காமெடியனாக வரும் யோகி பாப்பு : “வாப்பா டாக்டரு …அடிக்க ஆளு இல்லன்னா அவனையே அடிச்சு ப்பான் போல .. ” என்று கலாய்த்தபடி., எல்லை மீறாத இவரது யதார்த்தமான போக்கு படத்திற்கு கூடுதல் வலு சேர்த்திருக்கிறது.

சக்தி சரவணனின் அதிரடி சண்டை பயிற்சியில் லாரன்ஸ் கிஷோரின் பக்கா படத்தொகுப்பில் ,ரிச்சர்ட் M. நாதனின் ஒளிப்பதிவில் , மொத்த படமும் நிறைகிறது. விஜய் ஆண்டனியின் இசையில் “அடிவயிற்றில் இடம் கொடுத்து ….”, ” நூறாய் யுகம் நூறாய் … ஈ.டாய் உனக்கு ஈடாய் …..” , “அரும்பே , அரும்பே … என்னை கடத்திப்போ கரும்பே … ” , ” மனுஷா , மனுஷா …” ஆகிய பாடல்களும் , பின் னணி இசையும் மிரட்டல் .

சூப்பர் ஸ்டாரின் “காளி” எனும் பழைய ரஜினி பட டைட்டிலில். இளம் இயக்குனர் கிருத்திகா உதய்யின் நியூ டைப்பிலான ஸ்கீரின் பிளே கிரியேட்டிவிட்டியை பாராட்டியே ஆகவேண்டும்.

ஆக இந்த காளி கவர்கிறான்