சுந்தர பாண்டியன்’ இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார் சசிகுமார்!

0
226

நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்து ‘சுந்தர பாண்டியன்’ இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார் சசிகுமார்.

சமுத்திரக்கனி இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் 2009ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘நாடோடிகள்’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. சசிகுமார், அஞ்சலி, எம்.எஸ்.பாஸ்கர், அதுல்யா, பரணி, நமோ நாராயணன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘சுந்தர பாண்டியன்’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் சசிகுமார் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், சசிகுமார் ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார்.

இதன் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க இருக்கிறது. அனேகமாக, ‘நாடோடிகள் 2’ முடிந்த உடனேயே ‘சுந்தர பாண்டியன் 2’வில் நடிக்க வாய்ப்புள்ளது. எஸ்.ஆர்.பிரபாகரன், ‘சுப்ரமணியபுரம்’ மற்றும் ‘ஈசன்’ படங்களில் சசிகுமாரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.