ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்! – திரை விமர்சனம்! = சொதப்பல்!

கெளதம் கார்த்திக், காயத்ரி , நிகாரிகா கொனிடெல்லா, ரமேஷ் திலக் ,  “பிரண்டு பீல் ஆயிட்டாப்பில…” டேனியல் ,  ராஜ்குமார் , விஜி சந்திரசேகர்…உள்ளிட்ட நட்சத்திரங்கள் இருந்தும்
விஜய் சேதுபதியை மட்டுமே நம்பி , அவரையும் அவரை ரசிப்பவர்களையும் ஏமாற்றிடும் விதத்தில் வந்திருக்கும் படமே “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” .

ஆந்திராப்பக்கம் , ஒரு மலை கிராமத்து மக்கள் மொத்த பேரும் திருட் டை தொழில் ஆக கொண்டவர்கள் . அவர்களின் தலைவனான   எமன் , கொள்ளையில் ஈடுபடும் போது ., பெண்களை துன்புறுத்துவதோ தூக்குவதோ கூடாது … எனும் தங்கள் கூட்டத்தின் சட்ட திட்டத்தை மீறி ., ஒரு முறை சென்னையில்  கொள்ளைக்கு தன்  சகாக்களுடன் வந்த இடத்தில் .,  ஒரு பெண்ணின்  புகைப்படத்தை பார்த்து விட்டு ., இவர்தான் , தான் 14 வருஷங்களாக தேடிய காதலி … என திருட வந்த வேலையை விட்டு விட்டு., கல்லூரியில் படிக்கும் அந்த பெண்ணை சில நாட்கள் பாலோ செய்து  தன் சொந்த ஊருக்கு தூக்கி செல்கிறார். அப்பெண்ணைக் காப்பாற்ற., திருட்டு தலைவனை பின் தொடர்ந்து அந்த திருட்ட பயலுக ஊருக்கு செல்கின்றனர் அப்பெண்ணின் கல்லூரி காதலரும் அவரது காமெடி நண்பரும் … அய்யய்யோ அப்புறம்  ..? அந்த மலை கிராமத்தில் நடந்தது என்ன …? எனும் சுவாரஸ்ய கதையை காமெடி என்ற பெயரில் கடித்து குதறி ., எத்தனைக்கு எத்தனை சொதப்பலாக காட்சிப்படுத்தி ரசிகனை நெளிய வைக்க முடியுமோ ? அத்தனைக்கு அத்தனை சொதப்பலாக தந்திருக்கிறது இப்படக் குழு .பாவம்!

முதல் நாயகர் விஜய் சேதுபதி ,   எம சிங்கபுரத்து எமனாக வழக்கமான நக்கல் , நையாண்டி தனத்துடனேயே வளைய வருகிறார். இப்படத்தில் அவரைக் காட்டிலும் அதிகம் அடிக்கடி மாறும் அவரது கெட்-அப் புகள் ரசிகனை பெரிதாக ஈர்க்காதது வருத்தமான சங்கதியாகும்.

விஜய் சேதுபதி ஒரு சீனில் சொல்வது போன்று, மற்றொரு நாயகர்  கெளதம் கார்த்திக் ., அவரது டாடி  “மெளனம் ராகம்” கார்த்திக் போல் இப்படம் முழுக்க வந்து ரசிகனை  கவர முயன்று பெரிதாக தோற்றிருக்கிறார்.இவரும் இவரது காமெடி நண்பர் டேனியலும் சேர்ந்து செய்யும் சேட்டைகள் படமாக்கப்பட்டிருக்கும்  விதம் குணஷ் “ட்”டை !

கதாநாயகியரில்  கொள்ளைக்கூட்ட கோதாவரியாக  விஜய் சேதுபதி மீது பாவா , பாவா … என பித்துகொண்டு திரியும் காயத்ரி , புதுமுகம்  நிகாரிகா கொனிடெல்லா இருவரும்  பாத்தி ரத்திற்கேற்ற பக்கா தேர்வு . ஆனால் கதையோட்டத்தில் இவர்களது பாத்திரமே ரசிகனிடம் தேர்வாகாமல் போவது சோர்வு !

பிற நட்சத்திரங்களில் : சேதுபதியின் நண்பர்களாக வரும  ரமேஷ் திலக் , ராஜ்குமார் , கெளதமின் நண்பராக வரும்  “பிரண்டு பீல் ஆயிட்டாப்பில…” டேனியல் ,சேதுவின் அம்மாவும், எம ரோசம்மாவுமான  விஜி சந்திரசேகர் உள்ளிட்ட அனைவரும் இயக்குனர் சொன்னதை தங்கள் இஷ்டத்திற்கு  செய்துள்ளனர். அந்தோ  பாவமென்னவோ படம் பார்க்கும் நாமே !

ஆங்காங்கே பல் இளிக்கும் கோவிந்தராஜின் படத்தொகுப்பு , கதையே இல்லாமல் கதையும் திரைக்கதையும்  பண்ணியிருக்கும் கொடூரம் உள்ளிட்ட பலவீனங்களுக்கு .,ஸ்ரீ சரவணனின் ரம்ய ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரனின்  இசையும் பெரும் ஆறுதல்!

அதே போன்று மொத்தப் படத்தில் .,விஜய் சேதுபதியும் ,. “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” எனும் டைட்டிலும் பெரும் பலம் … என்றாலும்., பி.ஆறுமுககுமார் இயக்கத்தில்   “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” படத்தில் சுமார்  ஒன்பது கெட்-அப்புகளில் விஜய் சேதுபதி  வருகிறார்.  ஆனால் , அவை எதுவும்  விஜய் சேதுபதியின் ஒரிஜினல் கெட்-அப் பை த்தாண்டி ரசிகனை ஈர்க்கவில்லை … என்பதும் , கதையே இல்லாமல் சும்மா ஒரு கதை பண்ணி. படம் பண்ணியிருக்கும் விதமும்  இப்படத்தின் பெரும் பலவீனம் !

போகிற போக்கில் ., “இரண்டாயிரம் நோட்டையும் செல்லாதுன்னு சொன்னாலும்  சொல்லி டுவாங்க … பார்த்துடா….”என்பது உள்ளிட்ட புதுமையான காட்சிகளை புகுத்தி ., வழக்கமான காட்சிகள் இல்லாமல்  புதுசாக யோசித்த இயக்குனர் பி, ஆறுமுககுமார்., கொஞ்சம் கதையையும் யோசித்திருக்கலாம்!

அப்படி , இப்படி ,எப்படி பார்த்தாலும் … விஜய் சேதுபதி மாதிரி ஒரு ஹீரோவின் கால் ஷீட் கிடைத்ததும்., அதை மொத்த படக்குழுவும் ஒரேயடியாக  வீணடித்திருப்பதால் , “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’- ‘கரி நாளாக ரசிகனை வெறி கொள்ள வைப்பது கொடுமையிலும் கொடுமை!”