டச்சிங்கான கதைகளை தன் படைப்புகளால் பேச வைத்து பலகோடி ரசிகர்களைத் தன் வசம் வைத்திருக்கும் ஈரானிய இயக்குநர் மஜித் மஜீதி, ‘பியாண்ட் தி க்லௌட்ஸ்’ என்ற இந்தி திரைப்படத்தை தற்போது இயக்கியுள்ளார். ஈரானிய மொழியில் இல்லாமல் மஜித் மஜீதி இயக்கும் முதல் படம் இது. ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 20 ம் தேதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, புதுமுக நடிகர் இஷான் கத்தார், மலையாள நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ள இப்படம் கலாச்சாரம் மற்றும் மொழிகளின் எல்லையைக் கடந்து, சக மனிதர்களை நேசிக்கும் சென்டிமென்ட்ஸ்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
மஜித் மஜீதி இயக்கத்தில் உருவான ‘பியாண்ட் தி க்லௌட்ஸ்’ படத்தின் இசை அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இயக்குநர் மஜித் மஜீதி, நடிகர்கள் இஷான் கட்டார், மாளவிகா மோகனன், கவுதம் கோஷ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பாளர்கள் ஷரீன் மன்திரி கேடியா, கிஷோர் அரோரா மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சுஜாய் குட்டி ஆகியோர் முன்னிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதுள்ள ஆர்வத்தை தூண்டியது.
கலாச்சாரம் மற்றும் மொழிகளின் எல்லையைக் கடந்து, சக மனிதர்களை எப்படி நேசிக்கவேண்டும் என டச்சிங்கான பல சீன்களை கண்முன் நிறுத்தி ரசிகர்கள் மத்தியில் இந்த ட்ரெய்லர் வெகுவாக கவர்ந்தது. உணர்வுகளை இசை மொழியால் வருடும் துள்ளல் மெலடிகளுக்கு செவி கொடுக்கும் வகையில் ரஹ்மானின் இசை அமைந்துள்ளது.
வாழ்வின் அழகியலையும், சிறுசிறு சுவாரஸ்ய நினைவுகளையும் பேசும் இப்படம் குறித்து ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சுஜய் குட்டி கூறுகையில், ‘இப்பட வெளியான பிறகு இந்தியாவில் மஜீத்திற்கு ரசிகர்கள் அதிகமாவார்கள் என உணர்கிறேன். மஜீத்தின் படத்தை வெளியிடுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அனைத்து நாடுகளிலும் ஒரே நேரத்தில் இப்படத்தை வெளியிடுவது மிகவும் சவாலாகவுள்ளது. இந்த முயற்சிக்கான வரவேற்பு மிக பெரிய அளவில் கிடைக்கும் என நம்புகிறேன். பல்வேறு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் மனநிலையை வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பெரிய கனவுகளுடன் திரியும் 22 வயது அமிர், தவறான வழியில் செல்ல, அவனைக் காப்பாற்ற முற்படும் அவனது சகோதரி, இதற்காக போலீசால் கைது செய்யப்படும் கதாநாயகி தாரா…. இதைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதாக ‘பியாண்ட் தி க்லௌட்ஸ்’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இரு கதாபாத்திரத்தின் சாராம்சத்தை உணர்வுகளுடன் வெளிப்படுத்தியுள்ளார் மஜீத்’ என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
தயாரிப்பாளர்கள் ஷரீன் மன்திரி கேடியா பேசியபோது, ‘மஜீத்தின் படம் உலகளவில் ஒரே நேரத்தில் வெளியிடப்படுவது அவரது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் எங்களுக்கும் மிகவும் உற்சாகமாக உள்ளது. மஜீத்தின் கற்பனைத்திறன் மொழிகளின் எல்லைகளைக்கடந்து உணர்ச்சிகரமான கதை அம்சத்தை கொண்டிருக்கும். உலகம் முழுவதும் உள்ள மஜீத்தின் ரசிகர்களுக்கு இப்படம் விருந்தளிக்கும் என்பதில் சந்தேகமில்லை’ என தெரிவித்தார்.
நாமா பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மற்றொரு தயாரிப்பளரான கிஷோர் அரோரா கூறுகையில், ‘மஜீத்தின் படங்கள் இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் புகழ் அடையும். மனித உணர்வை விளக்கி பார்வையாளர்களின் இதயத்தைத் தொட மொழி அவசியமில்லை என்பதை வெளிப்படுத்திய மஜீத்தின் ‘பியாண்ட் தி க்லௌட்ஸ்’ படத்தை ஒரே நேரத்தில் வெளியிடுவதில் நாங்கள் மிகவும்
மகிழ்ச்சியடை கிறோம்’ என பெருமிதத்துடன் கூறினார்.
Related posts:
பிரபாஸின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளதுOctober 7, 2021
90 களில் காதல் மன்னனாக வலம் வந்த ஷாருக்கானை “ஹைய்யோடா” பாடல் மூலம் மீண்டும் அதே வசீகரத்திற்கு கொண்டு...August 14, 2023
ரன்பீர் கபூரின் 'அனிமல்' திரைப்பட டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு !September 18, 2023
பல்வேறு நாடுகளின் தூதரகங்களுக்காக திரையிடப்பட்ட ஷாருக்கானின் டங்கி திரைப்படம்December 30, 2023
‘பியாண்ட் த க்ளவுட்ஸ் ’ டிரைலர் - ஈரானிய இயக்குநர் மஜீத்-த்துக்கு பாராட்டு மழை!January 30, 2018