ஆண்களின் கண்ணீர் ஆபத்தானது!- கங்கனா ரனாவத் ஆவேசம்!

தமிழில், தாம் தூம் படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்தவர் கங்கனா ரனாவத். பிறகு இந்தி படங்களில் நடிக்கச் சென்றார். நடிக்க வந்த புதிதில் இவரை கண்டு கொள்ளாமல் ஒதுக்கினர். இன்று அவரது கால்ஷீட்டுக்காக கோடிகளில் கொட்டிக் கொடுக்க தயாராக இருக்கின்றனர். சினிமா வாழ்க்கை நன்கு அமைந்த போதிலும் கங்கனாவின் காதல் வாழ்க்கை சோகமானது. இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், கங்கனா காதலித்த விவகாரம் ஏற்கனவே பல முறை அம்பலத்துக்கு வந்திருக்கிறது. நீறு பூத்த நெருப்பாக இருந்த விவகாரம் தற்போது மீண்டும் புகைய ஆரம்பித்திருக்கிறது. சமீபத்தில் பேட்டி அளித்த கங்கனா மனக்குமுறலை கொட்டி தீர்த்தார்.

அவர் கூறியது: ஹிருத்திக் ரோஷனும் நானும் காதலித்தோம். கடந்த 2014ம் ஆண்டு எங்களுக்குள் பிரேக் அப் ஆகி விட்டது. ஆனால் ஒரு வருடம் என்னை கொடுமைப்படுத்தினார். இன்னொரு வரை நான் காதலித்துவிடக் கூடாது என்பதை கண்காணித்து வந்தார். எனது இ மெயிலில் ஊடுருவி என்னைப் பற்றி தகாத விமர்சனங்கள் செய்தார். இது பற்றி அவரது தந்தையிடம் கூறி மகனுக்கு அறிவுரை கூறச் சொன்னேன். அது நடந்தபாடில்லை. திருமணம் ஆன ஒரு ஆண் இன்னொரு பெண்ணிடம் தன் மனைவி தன்னை மதிப்பதில்லை, அவமானப்படுத்துகிறாள், திட்டுகிறாள், அடிக்கிறாள் என்று அழுதபடி சொல்லும் போது அதை கேட் கும் பெண்ணின் மனது இளகும். அது போல் நானும் ஹிருத்திக் கூறுவதையெல்லாம் நம்பி மனம் இளகினேன். அதை வைத்து என்னிடம் காரியம் சாதித்துக் கொண்டார். பிறகு என்னை தெரியவே தெரியாது என்கிறார். அப்படி கூறுவது ஏன்? என்னை சந்திக்க மறுக்கி றார். என்னை எங்காவது பார்த்தால் ஓட்டம் பிடிக்கிறார். நான் எந்த இடத்துக்கும் தலை நிமிர்ந்து செல்கிறேன். அவர் ஏன் மறைந்து கொள்கிறார். நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்புகிறார். உங்களுக்கு குடும்பம், குழந்தை, இமேஜ் இதெல்லாம் முக்கியம் என்று நினைத்தால் இன்னொருத்தியுடன் தொடர்பு வைத்திருக்கக் கூடாது.

அவர் என்ன தான் என்னுடன் தொடர்பு இல்லை என்று நோட்டீஸுக்கு மேல் நோட்டீஸ் விட்டாலும் நான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. அவர் என்னுடன் டேட்டிங் செய்தது உண்மை. நானும் பதிலுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். அவர் விடும் மிரட்டலுக்கு பயந்து ஓட நான் விவரம் தெரியாத பெண் அல்ல. இவ்வாறு கங்கனா ரனாவத் கூறினார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர்களுடன் படுக்கைய பகிர்வதால் ஏற்படும் பிரச்னை குறித்த போல்டான கருத்தை தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தற்போது கண்ணீர் விடும் ஆண்களை நம்பக்கூடாது என்ற கருத்தை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் நடிக்க வந்தபோது பல சிரமங்களை சந்தித்தேன். பின்னர் போகப் போக பழகிவிட்டது. சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் பல ஆண்கள் என் மீது கண் வைத்தார்கள். திருமணம் ஆனவர், திருமணம் ஆகாதவர், இளைஞர்கள், முதியவர்கள் பலர் என்னோடு இருக்க விரும்பினார்கள்.மிகவும் இளம் வயதில் திருமணமான ஆணின் கண்ணீர் கதையை நம்பத் தோன்றும். என் மனைவி என்னை அடிக்கிறாள் என்று கண்ணீர் விடுபவரையும் நம்புவோம். நான் இதுவரை திருமணம் ஆன மகிழ்ச்சியான ஆண்களை பார்த்ததே இல்லை. ஆண்களின் கண்ணீர் ஆபத்தானது. எனவே 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களின் கண்ணீர் கதையை நான் நம்பமாட்டேன் என்று கூறினார்.