ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் ‘ துமாரி சுலு’ (இந்தி) தமிழில் தயாராகிறது!

வெற்றிப்படமான ‘துமாரி சுலு’ (இந்தி) தமிழில் தயாராகிறது! தற்போது ராதாமோகன் இயக்கவிருக்கும் இப்படத்தில் வித்யாபாலன் விருதுபெற்ற வானொலி நிகழ்ச்சித்தொகுப்பாளர் வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார்!

கடந்த வருடத்தில் வெளியாகி மகத்தான வெற்றிபெற்ற ‘துமாரி சுலு’ படத்தை டிசீரிஸ் மற்றும் எல்லிப்சிப்ஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தத் திரைப்படத்தில் வித்யா பாலன் முக்கிய வேடத்தில் நடிக்க… மனவ் கௌல், நேகா துபியா, மலிஷ்கா மென்டோன்ஸா ஆகியோரும் நடித்திருந்தனர்.  அறிமுக இயக்குநர் சுரேஷ் திரிவேணி இயக்கியிருந்த குடும்ப & நகைச்சுவை படமான ‘துமாரி சுலு’ இந்திப் படத்தின் தமிழாக்க உரிமையை சென்னையின் பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் தற்போது தயாரித்துக்கொண்டிருக்கும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தில் நடிகர் கார்த்திக், கௌதம் கார்த்தி, ரெஜினா, வரலட்சுமி உட்பட மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த நிறுவனம் இதற்கு முன் ‘ஜீரோ’, ’இவன் தந்திரன் ஆகிய வெற்றிப்படங்களை வெளியிட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பான, ‘துமாரி சுலு’வின் தமிழ்ப் பதிப்பில் இந்தியில் வித்யாபாலன் நடித்த இரவு நேர வானொலி நிகழ்ச்சித்தொகுப்பாளர் வேடத்தில் பிரபல நடிகை ஜோதிகா நடிக்கிறார். குடும்பத் தலைவியான பெண் ஒருவர் நிகழ்ச்சித் தொகுப்பாளராகி நடத்தும் நிகழ்ச்சி நேயர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று ஹிட்டாகிறது. இந்தத் தொகுப்பாளினி இயல்பான தனது குடும்ப வாழ்க்கையையும் வெற்றிகரமாகத் தொடர்கிறது.

இதன் தமிழ்ப் பதிப்பை இயக்கும் ராதா மோகன் கூறுகிறார்: ‘‘

இந்தியில் வெற்றி பெற்ற ‘துமாரி சுலு’ படத்தைத் தமிழில் இயக்குவது மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. இதில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஜோதிகாவுடன் ‘மொழி’ படத்தில் நான் பணிபுரிந்திருக்கிறேன். அவருடன் மீண்டும் பணிபுரியக் கிடைத்த வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. யடார்த்தப் பாணியிலான ‘துமாரி சுலு’&வின் தமிழ்ப் பதிப்பு, ஜோதிகாவின் நடிப்பில் இந்தியைப் போலவே மிகவும் சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன்.’

‘தொகுப்பாளினி’ ஜோதிகா சொல்கிறார்:

‘‘நான் வித்யா பாலனின் தீவிர ரசிகை. நான் அவரதௌ படங்கள் எதையும் தவற விட்டதில்லை. அவரது குரல் எனக்கு பிகவும் பிடிக்கும். அவரது உச்சரிப்புத் தொனி பாலிவுட்டில் அரிதான விஷயம். அவர் நடித்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தமானது ‘துமாரி சுலு’. வித்யாபாலன் நடித்த வேடத்தை தமிழில் நான் செய்வது, என்னை கௌரவப்   படுத்துவதாகவே கருதுகிறேன். தயாரிப்பாளர் குடோஸ், இயக்குநர் சுரேஷ் த்ரிவேணி கூட்டணி உருவாக்கிய ‘துமாரி சுலு’ எல்லோரும் விரும்பக் கூடிய, நேர்மையான, யதார்த்தமான ஒரு நல்ல படம்”.

படத்தின் தயாரிப்பாளரான ஜி.தனஞ்ஜெயன் ( பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா) கூறுகிறார்: ‘

‘இந்த அருமையான படத்தின் தமிழ் உரிமை எங்களுக்குக் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். இதற்காக டி சீரிஸ் மற்றும் எல்லிப்சிஸ் எண்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்களுக்கு நன்றி. தமிழில் உருவாகும் இந்தப் படத்தில் ஜோதிகா நடிக்கிறார். தமிழ் சினிமாவில் பரவலான கவனம் ஈர்த்த ராதா மோகன் இதை இயக்குகிறார். இது எங்களுக்கு மறக்க முடியாத ஒரு படமாக அமையும் என்று நம்புகிறோம்!’’

இந்திப்படத்தயாரிப்பாளர்கள் பூஷண்குமார் (டி சீரிஸ்), தனுஜ் கார்க், அதுல் காஸ்பேக்கர், ஷாந்தி சிவராம்(எல்லிப்சிஸ் எண்டர்டெய்ன்மென்ட்) ஆகியோர் ஒருமித்த குரலில் சொல்கிறார்கள்: ‘

‘‘துமாரி சுலு’ இந்தியா முழுக்கப் பரவலான வரவேற்பு பெற்ற வெற்றிப்படம்.  இதை மொழிமாற்றம் செய்வதற்காகத் தென்னிந்தியாவிலிருந்து பலர் எங்களை அணுகினார்கள். கடைசியாக இப்போது பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் இந்தப்படம் தமிழில் வடிவம் பெறுகிறது. நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு அபூர்வமாகவே இந்திப்படம் ஒன்று தமிழுக்கு வருகிறது. தயாரிப்பாளர் ஜி.தனஞ்ஜெயன் தலைமையிலான குழு மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. நிச்சயமாக இந்தப் படம் சிறப்பாக அமையும் என்று நம்புகிறோம்!’’

இந்தி நடிகை வித்யாபாலன் கூறுகிறார்:

‘‘ஒரு தமிழ்ப்பெண் என்ற முறையில், எங்களது படம் தமிழ் மொழியில் தயாராவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. என்னைப் பொறுத்த வரை ‘துமாரி சுலு’ மறக்க முடியாத முக்கியமான ஒரு படம். தமிழ் ரசிகர்களிடன் சுலுவின் அன்பைப் பரப்பவிருக்கும் ஜோதிகாவுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்!’’
தமிழ்ப் படத்தில் இடம்பெறும் பிற கலைஞர்கள் தொடர்பான செய்திகள் முடிவு செய்யப்பட்டவுடன் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்.

‘துமாரி சுலு’ & சில தகவல்கள்:

இந்தப் படம் 17.11.2017&இல் வெளியாகி இந்தியா முழுக்கப் பரவலான வரவேற்பு பெற்ற வெற்றிப் படம்.

விமர்சன ரீதியாகப் பாராட்டு பெற்ற படமும் கூட. 20 கோடி ரூபாய் முதலீட்டில் தயாரான இந்தப் படம், 50 கோடி ரூபாய் வசூலித்து மகத்தான வெற்றி பெற்றது..

இந்தப் படத்தின் நடித்ததற்காகவித்யா பாலன் விருதுகள் பல பெற்றார்:

சிறந்த நடிகை & ஃபிலிம்ஃபேர் 2017, சிறந்த நடிகை & ஸ்டார் ஸ்க்ரீன் விருது 2017.

சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை சுரேஷ் திரிவேணியும், சிறந்த துணை நடிகைக்கான விருதை நேகா துபியாவும் ஸ்டார் ஸ்க்ரீன் மூலம் இந்தப் படத்துக்காகப் பெற்றனர்