கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. டி43 என்றழைக்கப்படும் படம். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. தனுஷின் 43 வது படம் என்பதால் டி43 என்று கூறி வருகின்றனர். இந்த படத்தில் மாளவிகா மோகனன் தனுஷிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இந்த படம் த்ரில்லர் படமாக அமையலாம்..
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் பணியாற்ற இருக்கும் நட்சத்திரங்களை ஒவ்வொருவராக சத்ய ஜோதி பிலிம்ஸ் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் பிரபல பாடலாசியரான விவேக் இந்த படத்தில் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுத உள்ளார் என்று சத்ய ஜோதி பிலிம்ஸ் அறிவிப்பை வெளியிட்டது. மேலும் இதையடுத்து இயக்குனர் மற்றும் நடிகரான சமுத்திரகனி இந்த படத்தில் இணைய உள்ளதாக சத்ய ஜோதி பிலிம்ஸ் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் டி43 படத்தின் படப்பிடிப்பு இன்று பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. இது குறித்து ‘இன்று டி43 படத்தின் படப்பிடிப்பை தொடங்குவது மிகவும் மிகழ்ச்சியாக உள்ளது. உங்கள் அன்பு என்று எங்களுக்கு தேவை’எனக் கூறப்பட்டுள்ளது. படப் பிடிப்பில் தனுஷ், மாளவிகா மோகனன், ஜி.வி.பிரகாஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர்.