புதுமையான கதையம்சங்களுடன் வரும்’நகல்’ பூஜை போட்டாச்சு!

0
229

S2S பிக்சர்ஸ் புரொடக்சன் தயாரிப்பில், A.R கிருஷ்ணா மோகன் இயக்கத்தில், சிவசக்தி நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் “நகல்” ! நேற்று காலை சென்னையில் மங்களகரமான பூஜையுடன் துவங்கியது,

இன்றைய உலகத்தில் திரைப்பட இயக்குநர்கள் பல்வேறு புதுமையான கோணத்தில் திரைப் படங்களை உருவாக்கி வருகிறார்கள்.அப்படி புதுமையான கதையம்சங்களுடன் வரும் படங்கள் பல உள்ளன.அதில் மிகவும் விறுவிறுப்பான Sci-fi படமாக உருவாகவுள்ளது இந்த “நகல்” திரைப்படம்.S2S பிக்சர்ஸ் தயாரிப்பில்,இயக்குநர் A.R.கிருஷ்ணா மோகன் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தில் “சிவசக்தி” கதாநாயகனாகவும்.மும்பை மாடல் “ரிஷ்மா” நாயகியாகவும் நடித்துள்ளனர்.நாயகி பல குறும்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

கதை மற்றும் திரைக்கதை சதுர்த்தி ஐயப்பன், F.s.பைசல் இசையில்,ஜோன்ஸ் ஆனந்தன் ஒளிப்பதிவில் உருவாகவுள்ள இப்படத்துக்கு ஸ்டன் சிவா ஸ்டன்ட்,மணிவர்மா மற்றும் ஷரன் சந்தரம் ஆகியோர் கலையை கவனிக்கின்றனர். Sci-fi த்ரில்லராக உருவாகவுள்ள இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தமிழின் முன்னனி நடிகர்கள் பலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படபிடிப்பு நேற்று காலை சென்னையில் மங்களகரமான பூஜையுடன் துவங்கியது.

ஜுலை 9ஆம் தேதி இப்படத்தின் படபிடிப்பு துவங்கி 40நாட்கள் தொடர்ந்து நடைபெற வுள்ளது.படத்தின் 75% படபிடிப்பு சென்னையிலும்,மீதம் உள்ள படபிடிப்பு வெளிநாடுகளிலும் உருவாகவுள்ளது.மெடிக்கல் ரீதியான காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கவுள்ளனர் குழுவினர்.பாடல்கள் ஊட்டியில் உருவாகவுள்ளது.

இயக்குனர் சுப்பிரமணிய சிவா மற்றும் நடிகர் / ஒளிப்பதிவாளர் நட்டிநட்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.