இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் சார்லி சாப்ளின் 2

தமிழில் தொடர்ந்து பல படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் முன்னணி பட நிறுவனங்களில் ஒன்றான டி.சிவாவின் அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படம் ‘சார்லி சாப்ளின்-2’.

இந்தப் படத்தில் பிரபு தேவா  நாயகனாக நடிக்கிறார். ஒரு முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். நாயகிகளாக  நிக்கி  கல்ராணி,  அதா ஷர்மா  இருவரும்  நடிக்கிறார்கள்.  பிரபல  இந்தி,  தெலுங்கு  நடிகையான  அதா ஷர்மா  தமிழில்  அறிமுகமாகும்  முதல்  படம்  இதுவாகும்.

இவர்களுடன் ரவி மரியா, செந்தில், ஆகாஷ், விவேக் பிரசன்னா, சாம்ஸ், சாந்தா, காவ்யா, மகதீரா வில்லன் தேவ்கில், மும்பை வில்லன் சமீர் கோச், கோமல் சர்மா, அமீத், நட்புக்காக வைபவ் போன்றவர்களும் நடித்து வருகின்றனர்.

ஒளிப்பதிவு – செளந்தர்ராஜன், இசை – அம்ரீஷ், பாடல்கள் – யுகபாரதி, பிரபுதேவா, கலை – ஆர்.கே.விஜய்முருகன், நடனம் – ஜானி, படத் தொகுப்பு – பென்னி, வசனம்  -கிரேஸி மோகன், சண்டை இயக்கம் –  கனல் கண்ணன், தயாரிப்பு – T.சிவா, கதை, திரைக்கதை, இயக்கம் – ஷக்தி  சிதம்பரம்.

IMG-20180213-WA0004   

படம் பற்றி இயக்குநர் ஷக்தி சிதம்பரம் பேசும்போது, “இது முழுக்க முழுக்க கமர்ஷியல் காமெடி படம். தற்போது படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்றது.

அப்போது பிரபு தேவாவும், வில்லன் தேவ்கில் இருவரும் மோதும் பயங்கரமான சண்டை காட்சி படமாக்கப்பட்டது. அத்துடன் பிரபு தேவா – சமீர் கோச் இருவரும் மோதும் சூட்கேஸ் சம்பந்தப்பட்ட சண்டை காட்சி ஒன்றும் இதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான அரங்கத்தில் படமாக்கப்பட்டது..” என்றார்.