காதல் காமெடி ஆக்‌ஷன் திகில் கலந்த படம் -’ பார்க்கத் தோணுதே’

0
269

வாசவி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக V.k.மாதவன் தயாரிக்கும் படத்திற்கு பார்க்கத் தோணுதே என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் ஹர்ஷா கதானாயகனாக நடிக்கிறார்.  கதாநாயகியாக சாரா நடிக்கிறார். மற்றும் பாண்டு, அப்பு இவர்களுடன் மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.

 பாடல்கள்     –      ஓஞ்சியப்பன் 

ஒளிப்பதிவு           –        G.ரமேஷ்

இசை                    –        மனீஷ்

எடிட்டிங்                      லெனின் சந்திரசேகரன்

தயாரிப்பு          –       V.k.மாதவன் 

                                                                                                                                     

எழுதி இயக்குகிறார் ஜெய் செந்தில்குமார்

                                                                                                                                       

படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது…

வெட்டியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் ஹர்ஷாவும் அவனது நண்பர்களும் காமெடி செய்து கொண்டு ஜாலியாக அந்த கிராமத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறவர்கள்.

அப்படிப் பட்ட ஹர்ஷா அதே கிராமத்தில்  இருக்கும் பெண் சாரா மீது காதல் கொள்கிறான். இருவரும் காதலர்களாக வலம் வருகிறார்கள்.

கிராமத்தில் நடந்த ஒரு சம்பவத்தால் சாராவுக்கு பேய் பிடித்துக் கொள்கிறது.

அவள் மீதிருந்த பேய் விலகியதாகாதலர்கள் ஒன்றினைந்தார்களாஎன்பது தான் கதை.

காதல் காமெடி ஆக்‌ஷன் திகில் கலந்த படமாக பார்க்கத் தோணுதே உருவாகி உள்ளது.

படப்பிடிப்பு கிருஷ்ணகிரி கொடைக்கானல் ஒகனேக்கல் போன்ற இடங்களில் நடை பெற்றுள்ளது. படம் விரைவில் வெளியாகிறது.