ஹன்சிகா மோத்வானி நடிக்கும் “மஹா” போஸ்டரில் இளவரசி பட்டம் ஏன்?

எந்தவொரு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் எனப்படும் முதல் தோற்றமுமே கதையின் பிரதான கதா பாத்திரத்தை சித்தரிக்கவும், திரைக்கதையின் உள் விவரங்களை அதன் இயக்குனர் கிரியேட்டிவ் முறையில் வெளிப்படுத்துவதிலும் முக்கியமாக முயற்சி செய்யும். இந்த வகையில் பல படங் களும் வெற்றிப் பாதையை கண்டு பயணத்தை மேற்கொண்டிருக்கின்றன. ஹன்சிகா மோத்வானி நடிக்கும் “மஹா” படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் நேற்று வெளியானது. இந்த போஸ்டர்கள் வைரல் ஆகி, ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. ஹன்சிகா மோத்வானி என்ற பெயருக்கு முன் “இளவரசி” என்ற தலைப்பை, மிக உற்சாகத்துடன் போஸ்டரில் அறிமுகப் படுத்தியிருந்தார் அறிமுக இயக்குனர் யூ.ஆர்.ஜமீல்.

“ஆம், நிச்சயமாக அவர் ஒரு இளவரசி தான். ஒரு இளவரசியின் அடிப்படைக் கூறுகள் வசீகரம், அழகு மற்றும் மரியாதை. இந்த ஹால்மார்க் குணங்கள் மூலம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார் ஹன்சிகா. நாயகி மையப்படுத்திய படங்களை கொடுக்கும் அளவுக்கு கமெர்சியல் மார்க்கெட்டை வைத்திருக்கிறார் ஹன்சிகா. நாயகியை மையப்படுத்திய படங்களில் நடிக்க அவர் எடுத்திருக்கும் முடிவு, அவரின் அசாதாரண திறமையால் நிச்சயம் பலன் அளிக்கும். இந்த படத்தில் பல குணங்களை கொண்ட மிக சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஹன்சிகா.

மிகவும் வைரல் ஆன கண்ணாடி போஸ்டர் உண்மையில் சொல்வது, “கண்ணாடியில் நீங்கள் பார்ப்பது அப்படியே உண்மை இல்லை, இது மாறும்” என்பது தான். இதன் அடிப்படையில் தான் அந்த கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். லக்ஷ்மன் போன்ற ஒரு ஒளிப்பதிவாளர், ஜிப்ரான் போன்ற ஒரு இசையமைப்பாளர் நல்ல படம் கொடுக்கும் எனது முயற்சிக்கு ஆதரவாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நிச்சயம் நல்ல படமாகவும், வணிக ரீதியில் வெற்றி படமாகவும் அமையும் என நம்புகிறேன். நல்ல திறமையாளர்களை கண்டு, அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் மதி சாருக்கு ஏற்ற வெற்றி இந்த படத்தில் கிடைக்கும்” என்றார்.