டிகர் அஜித், இயக்குனர் சிவா கூட்டணியில் நான்காவது முறையாக இணையும் படத்தின் பெயர், அதன் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் அறிவித்துள்ளது. வீரம், வேதாளம், விவேகம் என அஜித், சிவா கூட்டணியில் ஹாட்ரிக் படங்கள் உருவானது. இந்நிலையில் 4வது முறையாகவும் இந்த கூட்டணி தொடர்கிறது.
இந்த புதிய திரைப்படத்தின் பெயர் “விசுவாசம்” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 2018 ஜனவரி மாதம் தொடங்கும் என்றும், 2018 தீபாவளியன்று வெளியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது என சத்ய ஜோதி பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதோடு படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கி தீபாவளி 2018 ரிலீஸ் என்றும் பட நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த தகவலை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தன்னுடைய ட்விட்டரில் கூறியுள்ளார். படத்தின் அறிவிப்பை வெளிட்ட பத்தே நிமிடங்களில் இந்திய அளவில் #Viswasam என்னும் ஹேஷ்டேகை ட்ரெண்டாகி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.