சிம்பு இசை அமைத்த பாடல்களை தனுஷ் வெளியிடுகிறார்!

0
375

லொள்ளு சபா’ சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’. சந்தானம் ஜோடியாக வைபவி ஷாண்டில்யா நடித்துள்ள இந்தப் படத்தில், காமெடியனாக விவேக் நடித்துள்ளார். விடிவி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு, இசையமைத்துள்ளார் சிம்பு. அவர் இசையமைப்பாளராக அறிமுகமாகும் முதல் படம் இது.

இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் இரண்டு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பாடல்களை வெளியிட இருக்கிறார் தனுஷ்.

 

விஜய் – அஜித் ரசிகர்களைப் போலவே, தனுஷ் – சிம்பு ரசிகர்களும் இன்னும் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்நிலையில், ஒரே மேடையில் தனுஷ் – சிம்பு இருவரும் பல வருடங்களுக்குப் பிறகு ஒன்றாக இருக்கப் போகிறார்கள். சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ ரிலீஸாகும் டிசம்பர் 22ஆம் தேதி இந்தப் படமும் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  யுவன் சங்கர் ராஜா, அனிருத், ஷான் ரோல்டன், டி. ராஜேந்தர் – உஷா மற்றும் ‘பிக் பாஸ்’ ஹரிஷ் கல்யாண் ஆகியோர் இந்தப் படத்தில் பாடியுள்ளனர்.