தமிழகத்தில் திரையரங்குகள் அக். 6 முதல் மூடல்!

0
233

கேளிக்கை வரியை நீக்க வலியுறுத்தி, அக்.6 வெள்ளிக்கிழமை) முதல் தமிழகத்தில் திரையரங்குள் மூடப்படும் என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

திரைத்துறைக்கு தமிழக அரசு 10 சதவீதம் கேளிக்கை வரி விதித்திருந்தது. இதனை நீக்க வலியுறுத்தி தமிழக அரசுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதுகுறித்து, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்திருப்பதாவது:

தமிழக அரசு அறிவித்த 10 சதவீத கேளிக்கை வரி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 சதவீத கேளிக்கை வரி திரைத்துறைக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும்.

நுழைவுக் கட்டணத்தை முறைப்படுத்தாமல் வரி விதிவிதிப்பது பாதிப்பை ஏற்படுத்தும்.

கேளிக்கை வரியை நீக்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை முதல் அனைத்து திரையரங்குகளும் மூடப்படும்

அக். 6-ம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் வெளியிடப்படாது.

இவ்வாறு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கூறியிருக்கிறது.