திரு இயக்கத்தில் கார்த்திக் – கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவர்களுடன் இணைந்து நடிக்க தலைப்பு போட்டி ஒன்று நடத்தப்படுகிறது.
கவுதம் கார்த்திக் நடிப்பில் ‘ஹரஹர மஹாதேவகி’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது.அந்த படத்தை கவுதம் கார்த்திக்கின் ‘இவன் தந்திரன்’ படத்தை தயாரித்த கிரிடேட்டிவ் என்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
திரு இயக்கவிருக்கும் இந்த படத்தில் ‘நவரச நாயகன்’ கார்த்திக், கவுதம் கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடிக்க இருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கி ஜனவரி வரை நடக்க இருக்கிறது. படத்தின் தலைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், வருகிற அக்டோபர் 7-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், மக்களில் 5 பேருக்கு இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளிக்கப்பட இருக்கிறது. இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்த திரைப்படத்தில் நடிக்க உங்களிலிருந்து ஐந்து பேரை தேர்வுசெய்து இந்த இரண்டு நடிகர்க ளுடன் ஒன்று அல்லது இரண்டு காட்சிகளில் நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி படத்தின் “தலைப்பை யூகியுங்கள்” என்கிற இந்த ஆன்லைன் வோட்டிங்கில் கலந்து கொண்டு உங்களின் பதிவை அனுப்ப வேண்டும்.
இதற்கு எந்த அனுமதி கட்டணமும் கிடையாது. ஆன்லைன் வோட்டிங் லிங்கை ஓபன் செய்து உங்களின் என்ட்ரி-யை அனுப்ப வேண்டியது தான்… இப்படத்தின் தலைப்பு யூகிக்க இந்த ஆன்லைன் வோட்டிங் லிங்கில் இரண்டு துப்புகள் (clues) கொடுக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 6, வெள்ளிக்கிழமை மாலை 11.59 வரை உங்கள் என்ட்ரிகளை அனுப்பலாம். ஒருவரே பல என்ட்ரிகளையும் அனுப்பலாம். படத்தின் தலைப்பு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் உடன்படும் உங்களின் பதிவுகளிலிருந்து சரியான பதிவுகள் தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டு (ஆண்கள் 3, பெண்கள் 2) அவர்கள் நவம்பர் முதல் ஜனவரி 2018 வரை சென்னையில் நடைபெறவுள்ள படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு ஒன்று அல்லது இரண்டு காட்சிகளில் நடிக்க வைக்கப்படுவார்கள்.
அக்டோபர் 7, சனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு படத்தின் தலைப்பு சமூகவலைத்தளங்களில் அறிவிக்கப்படும். இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
வோட்டிங்கில் பங்கேற்க: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc6SgDgVbjHQWbeyYckt5vdueeS-Q9IVAbNiAnE8FoAE-qi1Q/viewform