தமிழில் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகவுள்ள ‘குயின்’ ரீமேக்கிற்கு ‘பாரீஸ் பாரீஸ்’ என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
கங்கனா ரணாவத் நடிப்பில் இந்தியில் வெளியான திரைப்படம், ‘குயின்’. இந்தப் படத்தில் நடித்ததற்காக கங்கனாவுக்கு தேசிய விருது கிடைத்தது. அந்த ‘குயின்’ படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கினார். தமிழில் இந்தப் படத்துக்கான வசனத்தை சுஹாசினி எழுதி, ரேவதி இயக்குவதாக இருந்தது. ஆனால், தற்போது பல மாற்றங்களுடன் தமிழச்சி தங்கபாணியன் வசன் எழுத,க் ரமேஷ் அரவிந்த் இயக்கவுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள்.
மேலும் இப்படம் தொடங்க தாமதமாகிக் கொண்டே இருந்ததால், கங்கனா ரணாவத் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த தமன்னா விலகி விட்டார். அவருக்கு பதிலாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார். தமிழச்சி தங்கபாண்டியன் வசனம் எழுதவுள்ளார். இப்படத்திற்கு பாரீஸ் பாரீஸ்’ என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு. இதன் படத்துவக்க விழா சென்னையில் இன்று (செப்டம்பர் 24) நடக்கிறது.
‘குயின்’ படத்தின் கதையை அப்படியே தென்னிந்திய கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு மாற்றி உருவாக்கவுள்ளார்கள். அக்டோபர் மாதம் மதுரையில் படப்பிடிப்பு துவங்குவதற்காக பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மதுரை படப்பிடிப்பைத் தொடர்ந்து லண்டன் மற்றும் பாரீஸில் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.
மார்ச் 2014-ல் விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியான படம் ‘குயின்’. அனுராக் காஷ்யப் மற்றும் விக்கிரமாதித்யா தயாரித்த இப்படத்தினை வயாகாம் நிறுவனம் வெளியிட்டது. விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.