‘களத்தூர் கிராமம்’ படத்தின் கதை என்ன?- இயக்குநர் பேட்டி!

0
369

‘களத்தூர் கிராமம்’. இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் சரண் கே. அத்வைதன். ஏ.ஆர். மூவி பேரடைஸ் சார்பில் ஆவுடைத்தாய் ராமமூர்த்தி தயாரித்துள்ளார். டட்டூ சினிமா ஆரூர் சுந்தரம் தமிழகமெங்கும் வெளியிடுகிறார். கிஷோர் கதை நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக வருகிறார் யக்னா ஷெட்டி . இவர் ஏற்கனவே சில கன்னடப் படங்களில் நடித்திருப்பவர். இவர்கள் தவிர ‘தகராறு’  சுலீல் குமார், அஜய் ரத்னம், தீரஜ் ரத்னம், ரஜினி மகா தேவய்யா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதை என்ன இயக்குனரிடம் கேட்டபோது. இது ஒரு புறக்க ணிக்கப்பட்ட கிராமத்தின் கதைஎன்று கூறலாம். அந்தக் கிராமத்தைப் போலீஸ் வஞ்சிக்கிறது. இதனால் அவமதிப்பும் ஏமாற்றமும் புறக்கணிப்பும் அனுபவிக்கிற மக்கள் போலீசை எதிர்க்கிறார்கள். அவர்களா? போலீஸா? யார் வெல்கிறார்கள் என்பதே கதை.

இது ஒரு ஆக்ஷன் படம் என்றாலும் குடும்பத்தில் நிகழும் மனம் நெகிழ வைக்கும் பாசப் பகுதிகளும் உண்டு.இந்தக் கதையைக் கேட்ட நடிகர் கிஷோர் தனது வேறு படத்தின் தேதிகளை மாற்றி இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்” என்றார்

மேலும்  ”இது 1980 முதல் 2000 வரை நடக்கும் கதை, எனவே அக்காலத்தின் பின்புலத்துக்காக நிறைய இடங்களைத் தேடியிருக்கிறார்கள் . கதையின்படி களத்தூர் கிராமம் என்பது தமிழ்நாடு – ஆந்திர எல்லையில் அமைந்து உள்ளதாக இருக்கும். ஆனால், வளர்ச்சி அடையாத இது மாதிரி கிராமத்தைக் கண்டுபிடிக்க சுமார் 130 ஊர்களைப் பார்த்துள்ளனர். எதுவும் திருப்தியாக அமையாமல் இறுதியாக புதுப்பட்டி என்கிற ஊருக்கு சென்றோம். அந்த ஊர் தூத்துக்குடி மாவட்டப் பகுதியில் இருந்தது. சீமைக்கருவை களை வெட்டி கரி மூட்டம் போட்டு பிழைக்கும் தொழிலை மையமாகக் கொண்ட கதைக்களம் என்பதால், அந்த ஊர் அச்சு அசலாக கதைக்கு ஏற்றார்போல் பொருந்தியது.

இது தவிர கழுகுமலை , விளாத்திகுளம், சங்கரன் கோவில், முத்தலாபுரம் பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.இப்படம் மக்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறோம்’’ என்றார்.