விஜய் படத்திற்கு தனி மரியாதை! -’மெர்சல்’ டைட்டிலுக்கு காப்புரிமை!-

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `மெர்சல்’. அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா உட்பட தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் நடிக்கும் ‘மெர்சல்’ படம் வரும் அக்டோபர் 18ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்றுகிறது.

சமீபத்தில் மிகப்பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மெர்சல்’ பாடல்கள் அதிரிபுதிரி ஹிட்டடித்துள்ளன. ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக சீரான இடைவெளியில் புதுப்புது தகவல்களை `மெர்சல்’ படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்து முடிந்தது. பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

அதன் ஒரு அங்கமாக சத்தமில்லாமல் புதிய சாதனைகளை அடுத்தடுத்து அரங்கேற்றி வருகிறது ‘மெர்சல்’ படக்குழு. சமீபத்தில் ‘மெர்சல்’ எமோஜி ஒன்றை ட்விட்டரில் அறிமுகம் செய்தது ‘மெர்சல்’ டீம். இது தென்னிந்தியாவிலேயே ஒரு படத்திற்காக செய்யப்படும் முதல் முயற்சி என்று அறிவித்தனர்.

இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் முதன் முறையாக ‘மெர்சல்’ படம் வணிகச் சின்னம் (TRADEMARK) முத்திரை வாங்கியு கோலிவுட்டின் மூக்கில் விரலை வைத்துள்ளது . இதையடுத்து ‘மெர்சல்’ தலைப்பை வேறு ஏதாவது பொருளுக்கு உபயோகித்தால், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ராயல்டி செலுத்த வேண்டும்.

தென்னிந்திய திரையுலகில் ஒரு படத்தின் பெயருக்கு வணிகச் சின்னம் பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் இந்தத் தலைப்பு நான் பதிவு செய்து வைத்திருந்தது என யாருமே உரிமைக் கொண்டாட முடியாது. இதற்கு முன்பாக ‘Why this Kolaveri di’ பாடலுக்கு வணிகச் சின்னம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.