விஜய் டிவியின் பிக் பாஸ் டீமில் ஓவியா தற்கொலை முயற்சி?

விஜய் டிவியில் நாள்தோறும் ஒளிப்பரப்பப்படும் வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். கமல் தொகுத்து வழங்கும் இநீகழ்ச்சியை ஒரு சாரார், இது முன்பே திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு Scripted நிகழ்ச்சி என்று கருத்து தெரிவித்தாலும், உள்ளே நடக்கும் பல நிகழ்வுகள் தினந்தோறும் சமூகவலை தளங்களில் விவாதப் பொருளாக மாறிவருகிறது. இந்நிகழ்ச்சியை தடைசெய்யக்கோரிய இந்து மக்கள் கட்சி உட்பட பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை வைத்துவரும் நிலையில்,இந்நிகழ்ச்சி தினந்தோறும் அடுத்தடுத்து சர்ச்சையை உருவாக்கிவருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் பரணியும் சக பங்கேற்பாளர்களின் நெருக்கடியை சமாளிக்கமுடியாமல் பித்து பிடித்தவர் போல் மாறினார். இதையடுத்து பிக்பாஸ் வீட்டின் சுவரைத்தாண்டி குதிக்கும் விபரீத முயற்சி யிலும் அவர் ஈடுபட்டார். அதுமட்டுமல்லாமல் பரணியுடன் ஏற்பட்ட ஒரு பிரச்சனையில் அவரை சிலிண்டரை கொண்டு தாக்க முற்பட்டார் கஞ்சா கருப்பு. அருகில் இருந்தவர்கள் தடுக்காமல் போயிருந்தால் அன்றே பிக்பாஸ் வீடு ரத்த களரியாக மாறியிருக்கும். தற்போது பங்கேற்பா ளர்களை உளவியல் ரீதியாக பாதிக்க செய்து, தற்கொலைக்கு தூண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை உடனே தடைசெய்யவேண்டும் என சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரித்து வருகின்றனர்.

ஆம்.. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது முதலே பெரும்பாலானவர்களின் மனம் கவர்ந்த நபராக விளங்கியவர் ஓவியா. நிகழ்ச்சியின் இரண்டாவது வாரம் முதலே ஓவியா, சக போட்டியாளர்களால் எவிக்‌ஷனுக்காக தொடர்ந்து நாமினேட் செய்ய பட்டப் போதிலும் மக்களின் ஆதரவுடன் அவர் தொடந்து காப்பாற்றப்பட்டு வந்தார். அவரின் இயல்பான குணங்கள் மக்களை வெகுவாக கவர்ந்ததை அடுத்து ஓவியா ஆர்மி ( Oviya Army ) எனும் பெயரில் ஹாஷ் டேக்குகளை உருவாக்கி, அவருக்கு ஆதரவாக மக்கள் தொடர்ந்து குரல்கொடுத்து வந்தனர். ஓவியாவுக்கு கிடைத்த ஆதரவு அண்புமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்களையே பொறாமை பட வைத்தது.

இந்நிலையில், சக பங்கேற்பாளரான ஆரவ் என்பவரிடம் காதல் வயப்பட்ட ஓவியா அதனை, அவரிடமே வெளிப்படையாகவும் தெரிவித்தார். ஆனால், ஆரவ் ஓவியாவின் காதலை ஏற்க மறுத்துதோடு, அவரை ஒதுக்கவும் தொடங்கினார். இதனால் கடந்த சில தினங்களாக கடும் மனவுளைச்சலுக்கு உள்ளான ஓவியா, தான் என்ன செய்கிறோம் என்பதையே புரியாதவர் போல் நடந்து கொள்ளத் தொடங்கினார். விருப்பமில்லை என தெரிவித்த பின்னரும் ஆரவுக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுக்கத் தொடங்கினார். இதனால் சகபோட்டியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பினை சந்தித்தபோதும் அதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தன்னிலை மறந்து செயல்படத்தொடங்கினார்.

இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் விரக்தியின் உச்சகட்டத்திற்கே சென்ற ஓவியா திடீரென பிக்பாஸ் வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். சக பங்கேற்பாளர்கள் உடனே சென்று அவரை காப்பாற்றி மீட்டனர். இதையடுத்து மனநல மருத்துவர்களால் அவர் பரிசோதனை செய்யப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருந்து காரில் வெளியேறுவது போன்ற ஒரு புகைப்படமும் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.ஆனால் இது குறித்து விஜய் டி வி வட்டாரம் எந்த தகவலும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.!