மழலை குரல்களின் சங்கமம் விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 வது சீசன் !!

மழலை குரல்களின் சங்கமம் விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 வது சீசன் !!

இதோ வந்துவிட்டது மழலைக் குரல்களின் இசை சங்கமம், தமிழக மக்களின் மனம் கவர்ந்த சூப்பர் சிங்கர் ஜீனியர் 10 வது சீசன், வரும் 16 ஆம் தேதி மாலை கோலாகலமாகத் துவங்குகிறது. முற்றிலும் எதிர்பாராத வகையிலான போட்டியாளர்கள், நடுவராக நடுவராக பாடகர்கள் மனோ, சித்ரா ஆகியோருடன் இசையமைப்பாளர் இமான் என, ஆரம்பமே களை கட்டுகிறது. இந்நிகழ்ச்சி குறித்த புரமோ, வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்குபவர்கள், கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், கோலோச்சி வருகின்றனர். குழந்தைகள் கலந்து கொள்ளும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் வெற்றிகரமான 10 வது சீசன் தற்போது கோலாகலமாகத் துவங்கவுள்ளது. ஒவ்வொரு குரலும்…
Read More
விஜய் டிவியின் பிக் பாஸ் டீமில் ஓவியா  தற்கொலை முயற்சி?

விஜய் டிவியின் பிக் பாஸ் டீமில் ஓவியா தற்கொலை முயற்சி?

விஜய் டிவியில் நாள்தோறும் ஒளிப்பரப்பப்படும் வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். கமல் தொகுத்து வழங்கும் இநீகழ்ச்சியை ஒரு சாரார், இது முன்பே திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு Scripted நிகழ்ச்சி என்று கருத்து தெரிவித்தாலும், உள்ளே நடக்கும் பல நிகழ்வுகள் தினந்தோறும் சமூகவலை தளங்களில் விவாதப் பொருளாக மாறிவருகிறது. இந்நிகழ்ச்சியை தடைசெய்யக்கோரிய இந்து மக்கள் கட்சி உட்பட பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை வைத்துவரும் நிலையில்,இந்நிகழ்ச்சி தினந்தோறும் அடுத்தடுத்து சர்ச்சையை உருவாக்கிவருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் பரணியும் சக பங்கேற்பாளர்களின் நெருக்கடியை சமாளிக்கமுடியாமல் பித்து பிடித்தவர் போல் மாறினார். இதையடுத்து பிக்பாஸ் வீட்டின் சுவரைத்தாண்டி குதிக்கும் விபரீத முயற்சி யிலும் அவர் ஈடுபட்டார். அதுமட்டுமல்லாமல் பரணியுடன் ஏற்பட்ட ஒரு பிரச்சனையில் அவரை சிலிண்டரை கொண்டு தாக்க முற்பட்டார் கஞ்சா கருப்பு. அருகில் இருந்தவர்கள் தடுக்காமல் போயிருந்தால் அன்றே பிக்பாஸ் வீடு ரத்த களரியாக மாறியிருக்கும். தற்போது பங்கேற்பா ளர்களை உளவியல் ரீதியாக…
Read More
error: Content is protected !!