2019-ல் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார்?

ஆக்‌ஷன், திரில்லர், ரொமாண்ஸ், புதிய தொழில்நுட்பம் என அனைத்து அம்சங்களும் கலந்து ஹாலிவுட் ஜனரஞ்சக படமாக ஜேம்ஸ்பாண்ட் படங்கள் அமைந்து இருக்கும். ஐயன் பிளம்மிங் என்ற பிரிட்டீஷ் எழுத்தாளர் எழுதிய ‘தி ஜேமஸ் பாண்ட்’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படங்கள் உருவாகி வருகின்றன.

மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற நடிகர்களில் ஒருவர் ஜேம்ஸ் பாண்டாக தேர்வு செய்யப்ப டுவார். அந்த நடிகரின் நடிப்பில் இரண்டும் அல்லது அதற்கு மேற்பட்ட ஜேமஸ்பாண்ட் படங்கள் உருவாகி வெளியாகும். அந்த வகையில் தற்போதைய ஜேம்ஸ் பாண்டாக அமெரிக்க நடிகர் டேனியல் கிரேக் திகழ்கிறார்.

இவர் கடந்த 2006-ஆம் வெளியான ‘கேசினோ ராயல்’ படம் மூலம் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திர த்தில் நடிக்கத் தொடங்கினர். தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக ஜேம்ஸ்பாண்டாக வலம் வரும் கிரேக், பாண்ட பட வரிசையின் 25-வது படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனத் படத் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு முன்னதாக இப் படம் வரும் 2019, நவம்பர் 8-ஆம் தேதி ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.

இதனிடையே இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், “ஜேம்ஸ் பாண்ட் துப்பறியும் படவரிசையின் 25-வது படமான லெஜண்டரி சூப்பர் ஸ்பை அடுத்த வருடம் நவம்பர் மாதம் 8-ஆம் தேதி வெளியாகிறது. இதற்கு முன்னர் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் நடித்த டேனியல் கிரேக்கே தொடர்வாரா? அல்லது வேறு ஒருவர் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா? என்ற தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.படத்தின் இயக்குனர் மற்றும் படக்குழுவினர் பின்னர் அறிவிக்கப்படுவார்கள் என்று படக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.