குழந்தைகளுக்கு மிகவும் தேவையான படம் ‘சில்லு வண்டுகள்’!

குழந்தைகள் மனதில் நல்லவற்றை விதைக்க வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் “ சில்லு வண்டுகள் “ .சரண்யா 3 D ஸ்க்ரீன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தி.கா.நாராயணன் தயாரித்துள்ள படம் “ சில்லு வண்டுகள் “

சாரங்கேஷ், அருணாச்சலம், சந்தோஷ் ராஜா, பூர்வேஷ், கிருஷ்ணா, மித்ரா, ரித்கிருத்தி, ஜோஸ்னா ஆகிய குழந்தை நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் அறிமுகமாகியுள்ளனர். மற்றும் கமலி, கார்த்திக், நிரஞ்சனி தனசேகரன், சீர்காழி பாலகுரு, ட்ரம்பட் பிரகாஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் தயாரிப்பாளர் தி.கா.நாராயணன் மற்றும் மா.குமார் பொன்னுச்சாமி இருவரும் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சுரேஷ் K.வெங்கிடி

படம் பற்றி இயக்குனர் சுரேஷ் K.வெங்கிடி கூறியதாவது …

இது முழுக்க முழுக்க குழந்தை நட்சத்திரங்களை கொண்டு குழந்தைகளுக்காக எடுக்கப் பட்ட படம். வாழ்கையில் அடி மட்டத்திலுருந்து, மேல் மட்டத்திற்கு வளர வேண்டும் என்றால் அதற்கு தவறான வழிகளை பின்பற்றக் கூடாது நல்ல வழிகளை குழந்தைகள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கருத்தை மையாமாக வைத்து உருவாக்கியுள்ளோம்.

இந்த படம் குழந்தைகளுக்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும்.இன்றைய காலக் கட்டத்தில் குழந்தைகள் மனநிலையில் சாதி,மதம், ஏழை, பணக்காரன் என்ற பிரிவினை கள் வராமல் அவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், உதவி செய்யும் எண்ணமும் உள்ளவர்களாக அவர்களை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை இன்றைய குழந்தைகளுக்கு, குழந்தைகளை வைத்தே இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம்.

இந்த படத்தின் கதையை தேனிசை தென்றல் தேவா -விடம் சொன்ன போது குழந்தை களுக்கு மிகவும் தேவையான படம் அதனால் நான் இசை அமைக்கிறேன் என்றார். ஒரு கானா பாடல் உட்பட நான்கு பாடல்களை பிரமாதமாக தந்திருக்கிறார். தயாரிப்பாளர் தி.கா.நாராயணன் குழந்தைகளுடன் இணைந்து சிறப்பாக நடித்துள்ளார். படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்றார் இயக்குனர் சுரேஷ் K.வெங்கிடி.

ஒளிப்பதிவு – R.S.விக்னேஷ்

இசை – தேனிசை தென்றல் தேவா

எடிட்டிங் – காளிதாஸ்

கலை இயக்குனர் – ஜெயகுமார்

நடனம் – அஜெய் காளிமுத்து

ஸ்டண்ட் – கஜினி குபேரன்

இணை தயாரிப்பு – மா.குமார் பொன்னுச்சாமி

தயாரிப்பு – தி.கா.நாராயணன்

error: Content is protected !!