யுவன் கவனம் இப்போது இருப்பது ‘ ராஜா ரங்குஸ்கி’யில்தான்!

வாசன் புரோடசன், பர்மா டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் படம் “ராஜா ரங்குஸ்கி”. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தை பர்மா புகழ் தரணிதரன் எழுதி, இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் கதாநாயகனாக மெட்ரோ சிரிஷ். கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடித்துள்ளனர்.  மெட்ரோ சிரிஷ் சமீபத்தில் சிறந்த புதுமுக நாயகனுக்கான film fare விருது பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார், படம் இறுதி கட்ட பணி யில்  இருக்கும் நிலையில், பின்னணி இசை அமைப்பதற்காக யுவன் படத்தை பார்த்திருக்கி றார். கடந்த சில மாதங்களில் பார்த்ததில் இது சிறந்த படம் என்று கருத்து தெரிவித்தார். இதை கேட்ட பட குழு சந்தோஷத்தில் மெய் சிலிர்த்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக தனது வேலையை முழு வீச்சில் ஆரம்பித்துள்ளார் யுவன்.

முன்னதாக கிரைம் கதை களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு வட சென்னையில் நடைபெற்று வந்த போது ஏர்பட்ட அனுபவம் பற்றி ஹீரோ ஷிரிஷ், “நான் இந்த ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தில் ராஜா என்கின்ற போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வந்தேன்.வட சென்னையில் உள்ள ஒரு பகுதியில் நாங்கள் படப்பிடிப்பை நடத்தி வரும்போது, அந்த பகுதியில் வசிக்கும் மக்களி டையே சிறிய சண்டை ஏற்பட்டது. நானோ போலீஸ் உடையில், அதுவும் ரோந்து வாகனத்தில் உட்கார்ந்து இருந்ததால், ஒரு நபர் என்னிடம் வந்து ‘நீங்க போலீஸ்தானே? ஏன் இவர்களை நீங்கள் கட்டுப்படுத்த கூடாது?’ என்று கேட்டார். சில நிமிடங்கள் எனக்கு என்ன சொல்வதென்றே தெரிய வில்லை. அதற்கு பிறகு நான் அவரிடம், ‘நான் நிஜ போலீஸ் இல்லை’ என்று சொல்லிவிட்டு, அந்த இடத்தில் இருந்து கிளம்பிவிட்டேன்…” என்று நகைச்சுவையாக கூறியிருந்தார்.

மேலும் நாயகியும் நடிகையுமான சாந்தினி தமிழரசன், “இந்த படத்தில் ரங்குஸ்கி(பிரபல எழுத்தா ளர் சுஜாதாவின் செல்ல பெயர்) என்கின்ற ஒரு தைரியமான எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். நகர்ப்புற பெண் வேடத்தில் நான் நடிக்கும் இந்த கதாபாத்திரம், நான் நடித்த மற்ற கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். ‘ராஜா’ கதாபாத்திரத்தில் நடிக்கும் கதாநாயகன் ஷிரிஷ், எனக்கு பலவிதங்களில் உறுதுணையாய் இருந்ததோடு மட்டு மில்லாமல் படப்பிடிப்பு தளத்திலும் பக்கபலமாய் இருந்தார். நிச்சயமாக இந்த ‘ராஜா ரங்குஸ்கி’, அனைவராலும் விரும்பக்கூடிய ஒரு திரைப்படமாக இருக்கும்..” என்று உற்சாகமாக கூறியிருந்ததும் நினைவுக் கூறத்தக்கது