ஆதிக் ரவிச்சந்திரன் படம் இயக்க – தடை?

தமிழ் சினிமா 2017ல் அரையாண்டு . நேரமிது 69 படங்கள் இம்மாத இறுதி வருவதையும் சேர்த்து. இந்த படங்களில் மிக மிக மோசமான படம் என் பதை போட்டிக்கு ஆளின்றி முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டது அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம். தமிழ் சினிமாவில் குடும்பத்துடன் பார்க்க கூடிய படங்களை தயாரித்தவர் என்ற பெருமைக்குரிய மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் இப்படி ஒரு ஆபாச குப்பை தொட்டி படமா?என்பதே மக்கள் மத்தியில் பேச்சு.

படைப்பாளிகளுக்கு கருத்து சுதந்திரம் தேவை தான்.AAA படத்தை இயக்கிய ஆதிக ரவிச்சந்திரன் தன் குடும்பத்தோடு கூட அமர்ந்து பார்க்க முடியாத படம் தான் AAA சுமார் 15 கோடி முதலீட்டில் தயாரிக்கப்பட்டAAAUடம் முதல் மூன்று நாட்களில் 4 கோடி மொத்த வசூலை கடந்து செல்ல இயலவில்லை. இந்த வார இதுதியில் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்கில் இருந்தும் படத்தை தூக்கி விட வாய்ப்பு உள்ளது. AAA uடத்தைவிலைங்கு வாங்க விநியோகஸ்தர்கள் தயாராக இருந்தும் தமிழ்நாடு முழுவவும் விநியோக முறையில் படத்தை வெளியிட்டார் தயாரிப்பாளர் .

இதனால் விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களுக்கு நஷ்டம் இல்லை. மக்கள் ரசனை தெரியாது, தயாரிப்பாளரின் கஷ்டம் புரியாது படத்தை இயக்கிய ஆதிக்ரவிச்சந்திரன் அடுத்து படங்கள் இயக்க தடை விதிக்கப்பட வேண்டும். சிம்பு போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்க வைக்கலாமா என்பதை தயாரிப்பாளர்களும் – இயக்குனர்களும் யோசிக்க வேண்டும்.

ராமானுஜம்