பக்கா கமர்ஷியலான பேய்படம் – ‘டோரா’

அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கியுள்ள இப்படம் சமீபத்தில் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வருகிற மார்ச் 31ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கும் இப்படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்தில் திகில் காட்சிகள் அதிகம் இருப்பதாகக் கூறி படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வலனாகியுள்ளனர்.

இதையடுத்து படக்குழுவினர் மீண்டும் கோரிக்கை வைத்தபின்னர் ‘டோரா’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தாண்டு நயன்தாரா நடிப்பில் வெளியாகும் முதல் திரைப்படம் ‘டோரா’ ஆகும்.

விவேக் சிவா மெர்வின் இசையமைத்துள்ள இப்படத்தில், தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தைப் பற்றி இயக்குநரிடம் கேட்ட போது, “இது பக்கா கமர்ஷியலான பேய்ப்படம்தான். வாராவாரம் வந்துட்டு இருந்த பேய்ப்படங்கள் எப்போ குறைஞ்சதோ அப்போ தான், நான் இந்த பேய்ப்படத்தை ஸ்டார்ட் பண்னேன். மத்த பேய்ப்படங்களில் மக்கள் பார்க்காத விஷயங்களை இந்த படத்தில் காட்டணும்னு ஆரம்பத்தில் இருந்தே ஒர்க் பண்ணிட்டு இருந்தேன். காரை வச்சு நிறைய பேய்ப்படங்கள் வந்திருக்கு. அதிலிருந்தும் இந்தப் படத்தை எப்படி வித்தியாசப்படுத்தலாம்னு யோசிச்சேன். முன்னாடியெல்லாம் பேய்ப்படங்களை பார்க்கும்போது மக்கள் பயப்படுவாங்க. ஆனால், சமீபத்துல பேய்ப்படங்களை அதிகமா பார்த்து பார்த்து பேய் வந்தாலே சிரிக்கிறாங்க. ஒரு ஷாட்டுல கேமரா மெதுவா மூவ் ஆகி போய்கிட்டு இருந்தாலே, ‘ஏய் பேய் வரப்போகுது’னு சிரிக்கிறாங்க. அதை நானே தியேட்டர்ல பார்த்திருக்கேன். அது மாதிரியான விஷயங்கள் இந்த படத்தில் இருக்காது. பேயைப் பார்த்து சிரிச்சவங்க எல்லாரும் ‘டோரா’வையும் நயன்தாராவையும் பார்த்து பயப்படுவாங்க.

நயன்தாரா மேடம் பவளக்கொடிங்கிற கேரக்டர்ல நடிச்சிருக்காங்க. பவளக்கொடிக்கு அப்பாவாக தம்பி ராமையா நடிச்சிருக்கார். ஹரீஷ் உத்தமன் போலீஸா நடிச்சிருக்கார். ‘குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்’ படத்தில் வில்லனா நடிச்சவர், இந்த படத்திலும் வில்லனா நடிச்சிருக்கார். இவங்களைப் போல காரும் இந்தப் படத்தில் ஒரு முக்கியான

இப்படத்தின் டீசர், டிரைலர், இசை ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. திட்டமிட்டப்படி இப்படம் வருகிற மார்ச் 31ஆம் தேதி வெளியாகும்” என்றார்