ஓட்டுக்காக பணம் தரும் பாணியை மையமாக வைத்து பின்னப்பட்ட ‘தப்பு தண்டா’

ஓட்டுக்காக பணம் தரும் பாணியை மையமாக வைத்து பின்னப்பட்ட ‘தப்பு தண்டா’

தேர்தல் ஓட்டுக்கு பணம் வாங்குவதும் கொடுப்பதும் மன்னிக்கமுடியாத குற்றம்” என்ற ‘உலகநாயகன்’ கமல் ஹாசனின் பிரபல வாக்கியம் மக்களின் மனத்திலும் ஆழமாக பதிந்துள்ளது. இதனை மையமாக வைத்து செப்டம்பர் 8 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் படம் ‘தப்பு தண்டா’ மாநில தேர்தல் மற்றும் தேர்தல் பிரச்சாரத்தை மையமாக கொண்ட படம் வெளியாவதற்கு உகந்த காலம் இது என பலரால் கருதப்படுகிறது. பல பிரபல இயக்குனர்களுக்கு ஆசானாக கருதப்படும் மறைந்த இயக்குனர் பாலு மகேந்திரா சினிமா பட்டறையிலிருந்து பயின்று வெளிவந்த ஸ்ரீகண்டன் இயக்கியுள்ள ‘தப்பு தண்டா’ திரைப்படம் செப்டம்பர் 8 அன்று ரிலீஸாகவுள்ளது. ‘மாநகரம்’ , ‘ஜோக்கர்’ போன்ற காமெடி /திரில்லர் படங்களுக்கு கிடைத்த வெற்றி அதே வகையான சினிமாவை சார்ந்த ‘தப்பு தாண்டா’ படத்துக்கும் பெரிதளவு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீகண்டன் பேசுகையில், ” இக்கதையை தயார் செய்து முடிக்க எனக்கு ஒரு வருடம் ஆனது.ஏனென்றால்…
Read More