‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி பிலிம்பேர் விருது விழாவைப் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார்

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி பிலிம்பேர் விருது விழாவைப் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார்

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் பிலிம்பேர் விருதுகளில் 7 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், விருது விழாவைப் புறக்கணிப்பதாக இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார். என்ன காரணம்? மும்பையில் உள்ள ஜியோ சர்வதேச மையத்தில் 68வது பிலிம்பேர் விருதுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை, பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். அவருடன் இணைந்து ஆயுஷ்மான் குரானா மற்றும் மனீஷ் பால் ஆகியோரும் தொகுத்து வழங்குகின்றனர். ஆலியா பட்டின் 'கங்குபாய் கத்தியவாடி', விவேக் அக்னிஹோத்ரியின் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்', ரன்பீர் கபூரின் 'பிரம்மாஸ்திரா' உட்படப் பல படங்கள் இந்த விருதில் வெவ்வேறு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், 'இந்த பிலிம்பேர் விருதில் பங்கேற்க மறுக்கிறேன்' என்று இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்வீட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில்,…
Read More