19
Oct
தனது தவறுகளிலிருந்து நல்ல படங்களில் நடித்து வரும் விமல் நடிப்பில், இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் சார். கல்வி எவ்வளவு முக்கியம் அது சமூகத்தை எவ்வளவு மாற்றும், அதற்கு ஆசிரியர்கள் எந்தளவு தியாகத்துடன் உழைக்கிறார்கள் என்பது தான் படத்தின் கரு. மாங்கொல்லை கிராமத்தில் உள்ள சிறிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் சரவணன். தனது தந்தை போராடி கட்டிய இந்த பள்ளியை தான் நடுநிலை பள்ளியாக மாற்றியது போல் தனது மகன் ( விமல்) இந்த பள்ளியை மேல்நிலை பள்ளியாக மாற்ற வேண்டும் என்பது தான் அவரது ஆசையாக இருக்கிறது. அவரது மகன் சிவஞானம் ( விமல்) . வெளியூரில் படித்துவிட்டு விருப்பமே இல்லாம சொந்த ஊருக்கு ஆசிரியராக வருகிறார். விமலின் தாத்தாவை சாமி அடித்து அவர் புத்தி பேதலித்துவிட்டதாக ஊருக்குள் ஒரு கதை வலம் வருகிறது. சின்ன வயதில் இருந்தே கிறுக்கு வாத்தியார் பேரன் என்று…