நடிகர் திலகம் சிவாஜிக்கே ஸ்பெஷலான படம் ’வியட்நாம் வீடு’ ! ஏன் தெரியுமா?

நடிகர் திலகம் சிவாஜிக்கே ஸ்பெஷலான படம் ’வியட்நாம் வீடு’ ! ஏன் தெரியுமா?

கவிதையோ, கதையோ அல்லது நகைச்சுவை என்றால் கூட மறக்க முடியாத கேரக்டர் கள் இருப்பது போல் சினிமாவிலும் நிறையவே உண்டு. பல சினிமாக்களில் சம்பந்தப் பட்ட நடிகர் - நடிகைகள், அந்தக் கேரக்டராகவே வாழ்ந்து நம்மை பிரமிக்க வைத்திருப் பார்கள். அப்படி, திரையுலகில் நம் கண்முன்னே ஆதர்ஷ தம்பதியாக வாழ்ந்து காட்டியவர்கள் சிவாஜியும் பத்மினியும். அந்தப் படத்தில் சிவாஜி தெரியமாட்டார். பத்மினியைப் பார்க்கமுடியாது. பிரஸ்டீஜ் பத்மநாபனும் சாவித்திரியும்தான் தெரிவார்கள்; ஒளிர்வார்கள். அந்தப் படம்... 'வியட்நாம் வீடு’. சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான இப்படம், நடிகர் திலகத்தின் உணர்ச்சிபூர்வமான நடிப்பைக்கொண்ட படங்களில் கண்டிப்பாக இடம் பெறுவது. ஏற்கெனவே விடிவெள்ளி (பிரபுராம் பிக்சர்ஸ்), பாசமலர், குங்குமம் (ராஜாமணி பிக்சர்ஸ்), புதிய பறவை (சிவாஜி பிலிம்ஸ்), அன்னை இல்லம் (கமலா பிக்சர்ஸ்), தெய்வமகன் (சாந்தி பிலிம்ஸ்) போன்ற படங்கள் சொந்தப்படமாக இருந்தபோதிலும் 'சிவாஜி புரொடக்ஷன்ஸ்' என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு முதல் படமாக தயாரிக்கப் பட்டது.…
Read More