துருவ் விக்ரமின் முதல் படம் -அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

துருவ் விக்ரமின் முதல் படம் -அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் விரைவில் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் அறிமுகமாகும் படம் குறித்த அறிவிப்பை விக்ரம் இன்று வெளியிட்டிருக்கிறார். தனது கடுமையான உழைப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் விக்ரம். அவரது மகனான துருவ் விக்ரம் தற்போது அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலைகழகம் ஒன்றில் படித்து வருகிறார். அவரது படிப்பை முடித்த பிறகு விரைவில் படங்களில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி வந்தன. அதற்கேற்றாற் போல் துருவ்வும் அவரது டப்மாஷ் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு டிரெண்டாகி வந்தார். இந்நிலையில், துருவ்வின் சினிமா அறிமுகம் குறித்த அறிவிப்பை விக்ரம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் விக்ரம் கூறியிருப்பதாவது, சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கில் துருவ் நடிக்க இருப்பதாக விக்ரம் அறிவித்துள்ளார். `அர்ஜுன் ரெட்டி' படத்தை இ4…
Read More