விடுதலை – விமர்சனம்!

விடுதலை – விமர்சனம்!

அடிப்பவர்களாகவும் அடி வாங்குபவர்களாகவும் தோன்றியவர்கள் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கும். இவர்களை எல்லாம் பொம்மைகள் போலக் கையாண்ட வகையில் ‘வாவ்’ சொல்ல வைக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். ஒளிப்பதிவில் வெவ்வேறு சாதனங்களை வேல்ராஜ் பயன்படுத்தியிருப்பது திரையில் தெளிவாகத் தெரிகிறது.சில சோதனை முயற்சிகள் ‘சோதனை’களாகவே அமைந்த காரணத்தால் உருவங்கள் மங்கலாகத் தெரிகின்றன. அதையும் மீறி, கதை நடக்கும் களத்தை அழகுறக் காட்டாமல் ஒரு பாத்திரமாகவே தென்பட வைத்தமைக்கு பாராட்டுகள்! கதை பரபரப்பாக நகர்ந்தாலும், ஒவ்வொரு பிரேமையும் சீர்மையுடன் கோர்க்க வேண்டுமென்பதில் மெனக்கெட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் ராமர். இந்திய அளவில் கவனிப்பு பெறும் வகையில் இப்படம் வரவேற்பைப் பெற்றால், அதில் இவரது உழைப்பும் முக்கியப் பங்கு வகிக்கும். ஜாக்கியின் கலை வடிவமைப்பு, ஸ்டன் சிவா மற்றும் பீட்டர் ஹெய்ன் குழுவினரின் சண்டைக்காட்சிகள், ஒலிக்கலவை மற்றும் விஎஃப்எக்ஸ் உட்படப் பல தரப்பிலும் கொட்டப்பட்ட பேருழைப்பே ஒவ்வொரு பிரேமையும் செறிவானதாக மாற்றியுள்ளது. முழுப்படத்தையும் பார்த்து முடித்துவிட்டு, தனது இசையை ஒரு பாத்திரமாக…
Read More