19
May
உறியடி மூலம் கவனம் ஈர்த்த விஜயகுமார் நடிப்பில், சேத்துமான் பட இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் எலக்சன். உள்ளாட்சித் தேர்தல் களப் பின்னணியில் நடைபெறும் கதை எப்படி இருக்கிறது இந்த எலக்சன். நாட்டின் உச்சகட்ட அரசியல் எங்கு ஆரம்பிக்கிறது என்றால் அது உள்ளாட்சி தேர்தலில் இருந்து தான், ஆனால் அந்தக்களத்தில் கட்சிகளை விட உள்ளூர் ஆட்களின் பகை, துரோகம், ஆசை என அந்த உள்ளூர் ஆட்களின் உறவும் அரசியலும் எந்த படத்திலும் பேசவில்லை, ஆனால் இந்தப்படம் அதை நெருக்கமாக பேசுகிறது. கட்சிகள் கோலோச்சும் அரசியலில் தொண்டன் ஒருவனின் மகன் தலைவன் ஆவதே எலக்சன் படத்தின் கதை. வாணியம்பாடி அருகே, அரசியல் கட்சியொன்றில் கொள்கைப் பிடிப்புள்ள தொண்டனாக இருக்கிறார் ஜார்ஜ் மரியன். அவருக்கு நேரும் அவமானத்தை துடைப்பதற்காகத் தேர்தலில் நிற்கும் அவருடைய மகன் உறியடி விஜய் குமார், தேர்தலில் வென்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை. கிராமங்களில் வாழும் மக்களுக்கு…