பொய்க்கால் குதிரை எப்படி இருக்கு?

பொய்க்கால் குதிரை எப்படி இருக்கு?

நடிகர்கள்: பிரபுதேவா, ரைசா வில்சன், வரலக்‌ஷ்மி சரத்குமார் இசை: இமான் இயக்கம்: சந்தோஷ் பி. ஜெயக்குமார் இருட்டு அறையில் முரட்டு குத்து, ஹர ஹர மகாதேவகி, இரண்டா குத்து போன்ற ஏ சான்றிதழ் படங்களை இயக்கிய சந்தோஷ் பி. ஜெயக்குமார் கஜினிகாந்த் படத்துக்கு பிறகு மீண்டும் U சான்றிதழ் படமாக இயக்கி உள்ள இந்த பொய்கால் குதிரை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். விபத்து ஒன்றில் மனைவியையும் தனது ஒரு காலையும் இழந்து விடுகிறார் நாயகன். ஒரு கால் இல்லாமல் தன் மகளை காப்பாற்ற வேண்டும் என வாழ்ந்து வரும் அவருக்கு, ஒரு நாள் திடீரென மகளுக்கு இதயத்தில் பிரச்சனை இருக்கிறது, அதை பல லட்சம் செலவு செய்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பது தெரிய வருகிறது. பணத்திற்காக பணக்கார குடும்பத்தின் வாரிசை கடத்தி பணம் பரிக்க திட்டம் போடுகிறார். அந்த திட்டம் எப்படி பல சிக்கலுக்குள் சிக்குகிறது என்பதே…
Read More
தெலுங்கு ரசிகர்களை குதூகலப்படுத்திய “க்ராக்”- தமிழில் பிப்ரவரி 5ல் ரிலீஸ்!

தெலுங்கு ரசிகர்களை குதூகலப்படுத்திய “க்ராக்”- தமிழில் பிப்ரவரி 5ல் ரிலீஸ்!

சங்கராந்தி சிறப்பு திரைபடமாக வெளியாகி பம்பர் ஹிட்டடித்த “க்ராக்” தெலுங்கு திரைப்படம் பிப்ரவரி 5முதல் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளிலும் வெளி வரவுள்ளது. தெலுங்கு திரையுலகில் மாஸ் மகராஜா என கொண்டாடப்படும் நடிகர் ரவிதேஜா நடிப்பில், தயாரிப்பாளர் B. மது தனது சரஸ்வதி ஃபிலிம்ஸ் டிவிஷன் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள தெலுங்கு படம் “க்ராக்”. நீண்ட பொதுமுடக்க காலத்திற்கு பிறகு சங்கராந்தி சிறப்பு திரைப்படமாக 2021 ஜனவரி 9 அன்று திரையரங்குகளில் வெளியானது. தமிழில் ‘மாஸ்டர்’ படம் போல் திரையரங்குகளுக்கு அலைஅலையாக பெரும் கூட்டத்தை கூட்டி வந்தது இப்படம். சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் மாஸ்,கிளாஸ் கமர்ஷியல் படமாக வெளிவந்துள்ள இப்படம் ரசிகர்களின் கோலாகல வரவேற்பில், பம்பர் ஹிட்டடித்தது. பல முன்னணி நடிகர்களின் இது வரையிலான பல்வேறு வசூல் சாதனையை முறியடித்து, சாதனை படைத்திருக்கிறது. பல மாதங்களுக்கு பிறகு தியேட்டர்களை திருவிழாக்கோலம் காண வைத்தது இப்படம். படத்திற்கு கிடைத்த மிகப்பெரும் வரவேற்பால்…
Read More