18
Aug
டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், அதைத் தொடர்ந்து வெளியான டைட்டில் லுக்கும் ரசிகர்களிடம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இந்தியாவின் மிகப் பெரிய கொள்ளையனான டைகர் நாகேஸ்வர ராவின் உலகை தரிசிக்கும் நேரம் இது. வம்சி இயக்கத்தில் மாஸ் மஹாராஜா ரவி தேஜாவின் பிரமாண்ட பான் இந்தியா திரைப்படம் “டைகர் நாகேஸ்வர ராவ்” படத்தின் அதிரடியான டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. ரவிதேஜாவை இந்தப்படத்தின் டீஸரில் பார்த்த பிறகு, இந்த டைட்டில் ரோலில் வேறு எந்த நட்சத்திரத்தையும் நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாது. கதாப்பாத்திரமாக அவரது உருமாற்றத்தில் இருந்து கதாபாத்திரத்தை சித்தரித்தது வரை, ரவி தேஜா டீஸரில் அசத்தியிருக்கிறார். அவர் தனது அசாத்திய நடிப்பால் அனைவரின் மனதையும் கொள்ளை கொள்கிறார். இயக்குநர் வம்சியின் சிறப்பான எழுத்து மற்றும் சிறந்த இயக்கம் படத்தை மெருகூட்டுகிறது. இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுத, மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.…