இளையராஜா, வைரமுத்து & கங்கை அமரனுக்கு என்ன பிரச்சினை!நாளைய இயக்குநர் படத்தின் பூஜையில் பாடலாசிரியர் சினேகன்!

இளையராஜா, வைரமுத்து & கங்கை அமரனுக்கு என்ன பிரச்சினை!நாளைய இயக்குநர் படத்தின் பூஜையில் பாடலாசிரியர் சினேகன்!

  எஸ்ஏஎஸ் புரொடக்சன்ஸ் சார்பில் யோகராஜ் செபாஸ்டியன் தயாரிப்பில் இயக்குனர் சித்திக் எழுதி இயக்கி நடிக்கும் நாளைய இயக்குநர் படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது. இந்த விழாவில் நடிகரும் பாடலாசிரியருமான சிநேகன் , இமான் அண்ணாச்சி, சேலம் ஆர் ஆர் தமிழ்ச் செல்வன், கூல் சுரேஷ், நடன இயக்குனர் தீனா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், நடிகர் கூல் சுரேஷ் பேசியதாவது, நாளைய இயக்குநர் படத்தின் பூஜை. நாளைய இயக்குநர் என்றால் அதற்கு ஒரு ராசி இருக்கிறது. டிவியில் இதே தலைப்பில் வந்து மிக பெரிய வெற்றியை தழுவியது நாம் அறிந்த விஷயம் அந்த ஷோவில் இருந்து வந்தவர் தான் கார்த்திக் சுப்புராஜ். அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து படம் பண்ணியவர் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் இயக்குனர் பாலாஜி தரணிதரன் என பலரும் அதிலிருந்து வந்தவர்கள் தான். இந்த படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது…
Read More
ஶ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகியுள்ள “கட்டில்” படத்தின் பாடல் வெளியீட்டு விழா!

ஶ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகியுள்ள “கட்டில்” படத்தின் பாடல் வெளியீட்டு விழா!

Maple Leaf's Productions தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பிரபல எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில், EV கணேஷ்பாபு, இயக்கி நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டினை பாட்டுத்திருவிழாவாகப் படக்குழுவினர் கொண்டாடினர். பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவினில் தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். இவ்விழாவினில் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது…. வைரமுத்து சாருக்குப் பிறகு யார் பேசினாலும் எடுபடாது. வைரமுத்து என் 25 படங்களுக்குப் பாட்டு எழுதியிருப்பார். நீண்ட காலத்திற்குப் பிறகு அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி. தேவா என் படங்களுக்கு இசையமைக்கும்போது கீபோர்டில் எப்போதும் ஶ்ரீகாந்த் தேவா தான் இருப்பார் இப்போது அவர் புகழ் பெறுவது மகிழ்ச்சி. இயக்குநர் நடிகர் EV கணேஷ் பாபு என் படத்தில் நடித்திருக்கிறார். இப்படி ஒரு படம் எடுத்து இயக்குநராகியிருக்கிறார் வாழ்த்துக்கள். இப்படத்தின் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள் நன்றி. இயக்குநர் மோகன் ராஜா…
Read More
ஆஸ்கர் விருதுபெற்ற இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கும் ஜென்டில்மேன்-ll படத்தின் பூஜை ! தயாரிப்பாளர் குஞ்சுமோன் விளக்கேற்றி துவங்கி வைத்தார்!

ஆஸ்கர் விருதுபெற்ற இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கும் ஜென்டில்மேன்-ll படத்தின் பூஜை ! தயாரிப்பாளர் குஞ்சுமோன் விளக்கேற்றி துவங்கி வைத்தார்!

  மெகா தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் தயாரிப்பில் பிரமாண்டமான வெற்றியை அடைந்த ஜென்டில்மேன் படத்தில் தலைப்பில் உருவாகும் படம் ஜென்டில்மேன்-ll. ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி இசை அமைக்கும் இந்த படத்தின் துவக்க விழா எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சர் எல்.முருகன், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, கோகுலம் பைஜூ காட்ரகட்ட பிரசாத், கே.ராஜன், தென்னிந்திய ஃபிலிம் சேம்பர் தலைவர் ரவி கொட்டாரக்கரா, இயக்குனர்கள் ஆர்.வி உதயகுமார், பி.வாசு, கதிர், இசையமைப்பாளர் தினா, நாஞ்சில் சம்பத், நடிகைகள் சித்தாரா, சத்யபிரியா, ஸ்ரீரஞ்சனி, விஜி சந்திரசேகர், குட்டி பத்மினி, ஹாரத்தி கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் பேசும்போது, “இங்கே தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலிருந்தும்…
Read More
வ.கௌதமன் இயக்கி நடிக்கும் படத்தின் பெயரை மாற்றிய படக்குழு! உண்மை சம்பவம் தான் காரணமா!

வ.கௌதமன் இயக்கி நடிக்கும் படத்தின் பெயரை மாற்றிய படக்குழு! உண்மை சம்பவம் தான் காரணமா!

  வி.கே. புரடக்க்ஷன்ஸ் தயாரிக்க உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் ஒரு மாவீரனின் வீர வரலாற்றை வ.கௌதமன் எழுதி இயக்குவதோடு அவரே கதை நாயகனாகவும் நடிக்கிறார். அவரோடு சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், பாகுபலி பிரபாகர், கிங்ஸ்லீ, ஆடுகளம் நரேன், இளவரசு, தீனா, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்க கதாநாயகியாக புதுமுகம் ஒருவர் அறிமுகம் ஆகிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்க "கவிப்பேரரசு" வைரமுத்து பாடல்கள் எழுத எஸ்.கோபிநாத் கேமராவை கையாள "ஸ்டண்ட்" சில்வா சண்டை காட்சியமைக்க தினேஷ் நடனம் அமைக்க பாலமுரளி வர்மன் வசனம் எழுத ராஜா முகமது படத்தொகுப்பு செய்ய நிகில் முருகன் மக்கள் தொடர்பை கவனிக்கிறார். விருத்தாச்சலம், நெய்வேலி மற்றும் பண்ருட்டி பகுதிகளில் முதல் கட்ட படபிடிப்பு நடத்திய நிலையில் விரைவில் "மாவீரா படையாண்டவன்" இரண்டாம் கட்ட படபிடிப்பினை தொடங்கவிருக்கிறது. ஸ்டண்ட் சில்வா அவர்கள் படத்தில் வரும் உக்கிரமான மாஃபியா கேங்குகளோடு கௌதமன் மோதவிருக்கும்…
Read More
பாலகுமாரன் படைப்புகளால் மரணத்தை வென்று நீண்ட காலம் தமிழோடு வாழ்ந்திருப்பார்!- வைரமுத்து அஞசலி

பாலகுமாரன் படைப்புகளால் மரணத்தை வென்று நீண்ட காலம் தமிழோடு வாழ்ந்திருப்பார்!- வைரமுத்து அஞசலி

தமிழ் வாசகர்களின் ஆதர்சன எழுத்தாளரும் திரைப்பட பிரபலச் வசனகர்த்தாவுமான பாலகுமாரன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று (மே 15) காலமானார். அவருக்கு வயது 71. தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்ற சிற்றூரில் பிறந்த பாலகுமாரனுக்கு, தமிழ் எழுத்துலகில் தனி இடம் உண்டு. தொடக்கத்தில் கவிதைகள் எழுதிவந்த இவர், அதன் பின் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் என பலவற்றையும் எழுதினார். மெர்க்குரிப் பூக்கள், கரையோர முதலைகள், பயணிகள் கவனிக்கவும், இரும்புக் குதிரைகள், சோழ சாம்ராஜ்யத்தின் புகழ் சொல்லும் கங்கை கொண்ட சோழன், உடையார் என 200க்கும் மேற்பட்ட நாவல்களும், 100க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதியுள்ளார். இதில் இரும்புக் குதிரைகள் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். எண்பது டூ தொண்ணூறுகளில் மிகப் பெரிய உச்சத்தில் இருந்து தன் எழுத்துக்களால் வாசகர்களைக் கட்டிப்போட்ட பாலகுமாரன். திரைத்துறையில் இருந்த ஆர்வத்தினால், இயக்குநர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து பணியாற்றினார். சிந்து பைரவி,…
Read More
தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ்ப்படம் ஜோக்கர்- வைரமுத்துவுக்கும் விருது!

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ்ப்படம் ஜோக்கர்- வைரமுத்துவுக்கும் விருது!

2016ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. ரஸ்தம் படத்தில் நடித்த இந்தி நடிகர் அக்ஷய் குமார் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘மின்னாமினுங்கு-தி ஃபயர்ஃப்ளை’ என்ற மலையாளப் படத்தில் நடித்த சுரபி சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த படத்துக்கான விருது, கசாவ் என்ற மராத்தி படத்துக்குக் கிடைத்துள்ளது. ‘வென்டிலேட்டர்’ என்ற மராத்திப் படத்தை இயக்கிய ராஜேஷ் மபுஸ்கர் சிறந்த இயக்குனராக தேர்வாகி உள்ளார். சமூக பிரச்னைகளை சிறப்பாகச் சொன்னப் படத்துக்கான விருதுக்கு அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்’ தேர்வு செய்யப்பட்டு உள்ளது. சிறந்த இந்திப் படத்திற்கான விருது சோனம் கபூர் நடித்த ‘நீரஜா’வுக்குக் கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு சிறப்பு விருதும் கிடைத்துள்ளது. குழந்தைகளுக்கான சிறந்தப் படமாக ‘தானக்’ என்ற தெலுங்குப் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த துணை நடிகைக்கான விருது ‘தங்கல்’ படத்தில் நடித்த காஷ்மீர் நடிகை சாய்ரா வாஸிமிற்கு கிடைத்துள்ளது. ஜோக்கர் தமிழில்…
Read More