*ஒரு லட்சம் குடும்பத்துக்கு வேலை வாய்ப்பு…இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் விஜய்சேதுபதி*

*ஒரு லட்சம் குடும்பத்துக்கு வேலை வாய்ப்பு…இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் விஜய்சேதுபதி*

தற்செயல்களால் ஆனது நம் இம்மானுட வாழ்வு. அப்படிப்பட்ட தற்செயல்களில், நம் மனதுக்குப் பிடித்த ஏதாவது ஒன்றை பொற்செயலாய் மாற்றும் இயல்பு கொண்ட மனிதர்கள் கோடியில் ஒருவர்தான். என்னது பீடிகை பெருசா இருக்கே என்று தோன்றலாம். சமூகத்துக்கு நல்ல காரியங்கள் செய்பவர்களில் பெரும்பாலானோர் விளம்பரத்தை விரும்பாதவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் அவர்களது தன்னடக்கத்தை புறம்தள்ளி, அச்செயலை வெளிக்கொண்டு வந்தால்தால்தான், அதை முன்னுதாரணமாகக் கொண்டு இன்னும் சிலர் வயலில் இறங்குவார்கள் என்பதற்காகவே இச்செய்தி. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளாலாரின் ஒற்றை வரியை உயிர்நாதமாகக்கொண்ட ‘மேற்குத் தொடர்ச்சி மலை’,’கடைசி விவசாயி’என்கிற இரட்டை காவியப் படங்களைத் தயாரித்த விஜய் சேதுபதி கடந்த மூன்று ஆண்டுகளாக, சத்தமில்லாமல் செய்து வரும் சாதனை ஒன்றைப் பற்றிக் கேள்விப்பட்டப்போது உண்மையில் சிலிர்ப்பாக இருந்தது. இது லட்சம் குடும்பங்களின் ஆனந்தக் கண்ணீர் கண்ட கதை. யெஸ்... கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்புப் பெற…
Read More