இமைக்கா நொடிகள் படத்தில் என்ன ஸ்பெஷல்? – இயக்குநர் அஜய் ஞானமுத்து பேட்டி!

இமைக்கா நொடிகள் படத்தில் என்ன ஸ்பெஷல்? – இயக்குநர் அஜய் ஞானமுத்து பேட்டி!

போனவருடம் கோலிவுட்டில் வெளியாகி ஹிட் அடைத்த டிமாண்டி காலனொ படத்தை இயக்கிய அஜய் தற்போது கேமியோ பிலிம்ஸ் சார்பில் சி.ஜே.ஜெயகுமார் சார்பில் தயாரிக்கும் படமான ‘இமைக்கா நொடிகள்’ என்ற திரைப்படத்தை டைரக்ட் செய்து வருகிறார்; இப்படத்தில் நயன் தாரா சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார். அதர்வா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் நடிக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். பெங்களூர் மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் தொடர் கொலைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படம் குறித்து கூறிய இயக்குநர் அஜய் ஞானமுத்து, “சைக்கோ கொலையாளியை மையமாக வைக்கப்பட்டு எடுக்கப்பட்ட படம் அல்ல. சைக்கோ கொலை என்றால் எந்தவித காரணமும் இருக்காது. ஆனால், இந்த படத்தில் நடக்கும் கொலை சம்பவங்களுக்கு பின்னணி ரொம்ப அழுத்தமான காரணம் இருக்கும். சமுதாயத்தில் முக்கியமானவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட, அந்த கொலைகள் ஏன் நடக்கிறது,…
Read More