09
Nov
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில், தேனாண்டாள் ராமசாமிமுரளி தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. இவ்விரண்டைத் தவிர சுயேச்சையாக தலைவர் பதவிக்கு P.L.தேனப்பன், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஓயாத அலைகள் அணி, முன்னேற்ற அணி சார்பில் பலர்போட்டியிட்டாலும் தேர்தல் களத்தில்” தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி” மட்டுமே தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. .இந்த அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தேனாண்டாள் ராமசாமி என்கிற முரளியுடன்தேர்தல்கள நிலவரம் பற்றி ஒரு நேர்காணல். என்னென்ன வாக்குறுதிகளை முன்வைத்து தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்.? தமிழ்த்திரையுலகில் இப்போதைய முக்கிய சிக்கலாக இருப்பதுVPF கட்டணம். அதைக் கட்ட மாட்டோம் என்றும் அதற்குரிய மாற்று ஏற்பாடுகளைசெய்வதற்கான முயற்சியை எங்கள் அணி வெற்றி பெற்றால் செய்வோம். நவீன தொழில் நுட்பங்கள் காரணமாக தமிழ்த் திரையுலகம் சந்திக்கும் சிக்கல்களை சரி செய்து அனைவருக்கும் சம…