எங்க சங்க ஆளுங்களை மிரட்டற வேலையெல்லாம் வேணாம்!- பாரதிராஜா எச்சரிக்கை!

எங்க சங்க ஆளுங்களை மிரட்டற வேலையெல்லாம் வேணாம்!- பாரதிராஜா எச்சரிக்கை!

தமிழ் திரைப்பட நடப்பு சங்க தலைவர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல் இல்லாமல் இங்கே புற்றீசல்கள் போல் தயாரிப்பாளர்களுக்கு சங்கம் உருவானது சற்றே துரதிஷ்டமானது.அதற்குக் காரணம் இங்கே சங்கங்களின் தலைமை பொறுப்புகளில் இருந்தவர்களின் புரிதலில் ஏற்பட்ட குழப்பங்களே என நான் நம்புகிறேன்.புது சங்கங்கள் உருவாவதென்பது கால மாற்றத்தின் விதிகளுக்கு உட்பட்டது. ஒன்று பழைய சங்கங்கள் கால மாற்றத்தை உணர்ந்து கொள்கைகளை கட்டமைத்துக்கொள்ள வேண்டும் , அல்லது மற்ற சங்கங்களுடன் கலந்து செயல்படக் கற்றுக்கொள்ள வேண்டும். இதை விடுத்து மற்ற சங்கங்களையும் அதில் உள்ளவர்களையும் அடக்கி ஆள நினைப்பது, இவை சார்ந்த துறையையே மொத்தமாக நிர்மூலமாக்கிவிடும். இதற்கு சான்றாக TFPC புதிய நிர்வாகம் பல சீர்கேடான விஷயங்களை முன்னெடுத்து வருகிறது.இது காலம் வரை TFPC இதற்கு இணையான இரு வேறு சங்கங்களுடன் இணக்கமாக இருந்து தயாரிப்பாளர் களுக்கு சேவையாற்றி வந்துள்ளது ,இதை இந்த புதிய நிர்வாகம் கற்றுக்கொள்ள வேண்டும்.TFAPA-ல் உள்ள…
Read More
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து பி.எல்.தேனப்பன் விலகல்!

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து பி.எல்.தேனப்பன் விலகல்!

கோலிவுட்டின்  தலைமை செயலகமான  தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து பிரபல தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் விலகியுள்ளார். இது தொடர்பாக  அவர் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷாலுக்கு எழுதிய கடிதத்தில், விஷால் தலைமையிலான நிர்வாகிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களையும் கண்டனங்களையும் தெரிவித்திருக்கிறார். தேனப்பன் எழுதியுள்ள ராஜினாமா கடிதம் இதோ : “நான் இதுவரை தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளராக ஒரு முறையும், துணைத் தலைவராக ஒரு முறையும், பல முறை செயற்குழு உறுப்பினராகவும்  பணியாற்றியுள்ளேன். இப்பொழுது இருக்கும் நிர்வாகத்தில் எதிர்க்கட்சி அணியிலிருந்து செயற்குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வெகு சில உறுப்பினர்களில் நானும் ஒருவன். இதுவரை என்னால் முடிந்த அளவிற்கு இந்த நிர்வாகத்திற்கு என்னுடைய ஒத்துழைப்பை அளிக்கத் தவறியதில்லை. இப்போது நான் தற்போதைய நிர்வாகத்தின் கீழ் செயற்குழு உறுப்பினராகத் தொடர விரும்பாததால் அப்பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளேன். என் ராஜினாமா முடிவுக்கான காரணங்களை கீழே குறிப்பிட்டுள்ளேன் : 1. முதலில் தி.நகா் அலுவலகம் தனியாக…
Read More
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ; நடிகர் விஷால் வெற்றி!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ; நடிகர் விஷால் வெற்றி!

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் சென்னை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் நேற்று நடைபெற்றது. புதிய நிர்வாகிகளுக்கான இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகர் விஷால், ஆர். ராதாகிருஷ்ணன், கேயார் ஆகிய மூன்று அணிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்டோர் வாக்களித்தனர். இதையடுத்து, பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று இரவு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவருக்கு போட்டியிட்ட விஷால் 478 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதேபோன்று, பொருளாளர் பதவிக்கு விஷால் அணி சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர்.பிரபு 344 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர் 326 வாக்குகளும், விஜய் முரளி 212 வாக்குகளும் பெற்றனர். துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட, நடிகர் பிரகாஷ்ராஜ் 408 வாக்குகளும், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் 357 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். மேலும், செயற்குழு உறுப்பினர்களாக விஷால் அணியை சேர்ந்த…
Read More